ஹர ஹர நம: பார்வதி பதயேஹர ஹர மஹா தேவா

Tuesday, November 22, 2011

சிவாயநம


ஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.
பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.
நாரதரும் அப்படியே கேட்டார்.
இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.
பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.
பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார்.
""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.
நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை. இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை.
""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.
நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.
அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.
பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். சிவாயநம என்பதை "சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். சி- சிவம்; வ- திருவருள், ய-ஆன்மா, ந-திரோதமலம், ம-ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்."சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவாயநம' என்போம்

சிவன் தோற்றமும் முடிவுமற்றவன்

சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். வட்ட வடிவத்துக்கு எது தொடக்கம், எது முடிவு? சிவலிங்கம் நீள்வட்ட வடிவமாக உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தின் சுழற்சியே நீள்வட்டப் பாதையில்தான் அமைகிறது. ‘லிம்’ என்பது உலக முடிவில், அண்ட சாரசரங்களும் லயிப்பதற்குரிய இடம். ‘கம்’ என்பது லயித்த பொருட்கள் அனைத்தும் அதிலிருந்தே வெளிப்படுவதைக் குறிப்பது. எனவே, அனைத்தும் சிவனிடமிருந்தே தோன்றி, சிவனிடமே ஓடுங்கி, மீண்டும் சிவனிட மிருந்தே வெளிப்படுகின்றன. அந்த ஆதிபரம் பொருளான சிவன் தோற்றமும் முடிவுமற்றவன் என்பதனையே ‘லிங்க வடிவம்’ குறிக்கிறது.

Friday, November 18, 2011

நம்பியாண்டார் நம்பி பொள்ளாப்பிள்ளையார்

களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.

இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.

இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா…’ என்றார்.

மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.

“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.

பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?

அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…

“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.

அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.

அவரிடம், “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.

அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.

மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.

அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.

அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

Monday, November 14, 2011

ஸ்ரீ காலபைரவாஷ்டகம்


தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   1

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   2

ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..   3

புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   4

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   5

ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   6

அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   7

பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   8

          .. பல ஷ்ருதி ..
காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்

.. இதி ஸ்ரீமசங்கராசார்யவிரசிதம் 
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே...




சிவமயம்

1) மண்ணாதி பூதமோடு விண்ணாதி அண்டம் நீ மறை நான்கின்
அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
மண்டலமிரண்டேழும் நீ பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும்
நீ பிறவும் நீ ஓருவ நீயே, பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் நீ தந்தை நீயே, பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ
ஓளியும் நீ போதிக்கவந்த குரு நீ,புகழொணாக கிரகங்களொன்பதும் நீ
இந்த புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோடிகளில்
இருப்பவனே என் குறைகளார்க் குரைப்பேன்,

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

2) மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட ,
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை
முருகேசனாட ஞான சம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனியட்ட
பாலகருமாட நரை தும்பையறுகாட நந்திவாகனமாட நாட்டியப்
பெண்களாட வினையோட உனைப்பாட யெனைநாடி இது வேளை
விருதோடு ஆடி வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே .


3) கடலென்ற புவிமீதில் அலையென்ற வுருக்கொண்டு கனவென்ற
வாழ்வை நம்பிகாற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்தம் நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்றயிரைதேடி
ஓயாமலிரவு பகலும் உண்டுண்டுறங்குவதைக் கண்டதேயல்லாது
ஒருபயனடைந்திலேனே ! தடமென்ற மிடி கரையில் பந்தபாசங்களெனும்
தாபம் பின்னலிட்டு தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனையிவ் வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று
கேளாதிருப்பதுன் அழகாகுமோ

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே .


4) வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம்தம்பனம் வசியமல்ல பாதாள
வஞ்சனம் பரகாயப் பிரவேச மதுவல்ல ஜாலமல்ல அம்பு குண்டுகள்
விலக மொழியு மந்திரமல்ல 
ஆகாய குளிகையல்ல அன்போடு
செய்கின்ற வாத மோடிகளல்ல அரியமோகனமுமல்ல கும்பமுனி
மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி கொங்கணர் புலிப்பாணியும்,
கோரக்கர் வள்ளுவர் போக முனி இவரெலாங் கூறிடும்
வைத்தியமல்ல , என் மனது உன்னடிவிட்டு நீங்காது நிலை நிற்க
வேயுளவு புகல வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

5) நொந்துவந்தேனென்று ஆயிரஞ் சொல்லியும் செவியென்ன
மந்தமுண்டா நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தையுண்டா சந்ததமுன் தஞ்சமென்றடியைப்
பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ தந்திமுகனறு முகன்
இரு பிள்ளை இல்லையோ தந்தை நீ மலடு தானோவிந்தையும்
ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்று மறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதல் வேடிக்கை
இதுவல்லவோ இந்த உலகீரேழு மேனளித்தாய் சொல்லும்
இனி உன்னை விடுவதில்லை

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

6)வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத
போதிலும் வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த போதிலும் மொழிகளை மொகனையில்லாமலே பாடினும் மூர்க்கனேன்
முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே கவரினும் முழுகாமியே
யாகினும் பழியெனக் கல்லவே தாய் தந்தை கல்லவோ பார்த்தவர்கள்
சொல்லார்களோ பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ பாலகனைக்
காக்கொணாதோ யெழில் பெரிய அண்டங்களடுக்கா யமைத்த நீயென்
குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.
7)அன்னை தந்தகைளென்னை யீன்றதற் கழுவனோஅறிவிலாததற்
கழுவனோஅல்லாமல்நான் முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோமுன் பிறப்பென்னவினை செய்தனென்றழுவனோ
என் மூடவறிவுக் கழுவனோ முன்னிலென் வினைவந்து மூளுமென்றழுவனோ முத்திவருமென்றுணர்வனோ தன்னை நொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோதவமென்ன வென்றழுவனோ தையலர்க்ழுவனோ மெய்வளர்க் கழுவனோ தரித்திரதிசைக்கழுவனோ
இன்னமென்ன பிறவி வருமோ வென்றழுவனோ யெல்லா முறைக்க
வருவாய்,


ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.


8)காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டேனோ கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருளிலையென்றனோ தானென்று கெர்வித்துக கொலை களவு செய்தனோ தவசிகளை யேசினேனோ வாயாரப பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரைப் பழித்திட்டனோ வடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ வந்தபின் என்செய்தேனோ ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ யெல்லாம் பொறுத்தருளுவாய்


ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.


9)தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன தன் பிறவியுறவுகோடி தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன தாரணியை யாண்டுமென்ன சேயர்களிருந்தென்ன குருவா இருந்தென்ன சீடர்களிருந்து மென்ன, சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன நதிகளெல்லாம் ஒயாது மூழ்கினும என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ இதுவெல்லாம் தந்தையுறவென்றுதான் உன்னிருபாதம் பிடித்தேன். யார் மீது உன் மனமிருந்தாலுமுன் கடைக்கண் பார்வை அது போதும்

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

10)இன்னமுஞ் சொல்லவோ உன் மனங்கல்லோ இரும்போ பெரும் பாறையோ இரு செவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகுதானோ என்னென்ன மோகமோ இது வென்ன சாபமோ இதுவே உன் செய்கைதானோ இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமேயானாலும் நான் விடுவனோ உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனை யடுத்துங்கெடுவனோ, ஓகோவிது உன்குற்ற மென்குற்றமொன்றுமில்லை. உற்றுப்பார் பெற்றவையா என்குற்றமாயினும் உன் குற்றமாயினும் இனியருளளிக்க வருவாய்,

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன்வரை, சற்றெனக்குள்ளாக்கி ராசிபனிரெண்டையும் சமமாய் நிறுத்தியுடனே பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால், பகர்கின்ற கிரணங்கள் பதிணொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி யென்முன் கனி போலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங் கசக்கிகர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி இனியவளமருவு சிறுமணவை முனிசாமியெனை யருள்வதினியுன் கடன் காண்

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

Sunday, September 18, 2011

சிவ நாம மஹிமை


நம்மிடத்தில் ஒரு விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப் பாதுகாப்போம். அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்கள் மூன்றையும்'த்ரயீ' என்பார்கள்.
அப்போதும் ரிக் மற்றும் ஸாம வேதங்களுக்கு நடுவில் இருக்கிறது யஜுஸ். இந்த யஜுர் வேதம் 'சுக்ல, க்ருஷ்ண' என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்கிற 5 பகுதிகளின் மத்தியில் வருவது 'க்ருஷ்ண யஜுஸ்'. இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் என்பது அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின் மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம், இங்கே தான் வருகிறது ஸ்ரீ ருத்ரம். இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக வருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே த்வயக்ஷரமான 'சிவ'.

உடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்கிறார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதை திருவள்ளூவர் மெய்ப்பொருள் என்று கூறுகிறார். வேதங்களை எல்லாம் ஒரு சரீரமாக, மெய்யாக வைத்துக் கொண்டால் அத்ல் உயிராக, மெய்ப் பொருளாக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால் அந்த ஹ்ருதயம், சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானசம்மந்தர் பின்வருமாறு சொல்கிறார்.

வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாத (ன்) நாமம் நமசிவாயவே

அவ்வைப் பாட்டி செய்த 'நல்வழி' என்னும் நூலில்,

சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு)
அவாயம் (அபாயம்) ஒருநாளும் இல்லை'

என்று சொல்லியிருக்கிறார்.

சிவநாமத்தின் மஹிமையை அம்பாள் சொல்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. தாக்ஷாயணி ப்ரபாவம் பற்றிச் சொல்கையில், தாக்ஷாயணி ப்ராணத்யாகம் செய்யும் சந்தவேசத்தில், 'த்வயக்ஷரம் நாம கிரா' என்று, அதாவது பஞ்சாக்ஷரமாக எல்லாம் இல்லாது, 'சிவ' என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தாலேயே சர்வ பாபங்களையும் போக்கிவிடும் என்கிறாள். இதையே திருமந்திரத்தில் "சிவ சிவ என்கிலர் தீவினையாளர் " என்று திருமூலரும் சொல்வது.

Monday, September 5, 2011

ஓங்கி உலகளந்த உத்தமன்







thirukovilur divyadesam

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி கோதை போற்றிய நாயகன் -
முதலாழ்வார்கள் மூவர் மங்களாசனம் செய்த பெருமாள் -
உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று.  
பெருமாள் ஸ்ரீ சக்கரம் விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.வேணுகோபாலர் க்ஷேத்திர பாலகராக அருளுகிறார்.கோயில் சுற்றுப்பிரகாரத்தில் வேணுகோபாலன், லட்சுமிநாராயணன், வீர ஆஞ்சநேயர், லட்சுமி ராகவன், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆண்டாள், அசுரகுல குரு சுக்ராச்சாரியார் ஆகியோர் அருள் செய்கின்றனர்.
[Gal1]


தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் 5 ஏக்கர் பரப்பளவுள்ள இக்கோயிலின் ராஜகோபுரம் 192 அடி உயரம் கொண்டது. 11 நிலைகள் கொண்டது. இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் ஆகும். (முதல் இடம் ஸ்ரீரங்கம், இரண்டாம் இடம் ஸ்ரீவில்லிபுத்தூர்) கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்ற பின்னரும், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளைக் காணலாம். இத்தலத்தை நடு நாட்டு திருப்பதி என கூறுகிறார்கள். கேரளா திருக்காக்கரையில் வாமனருக்கென மிகப்பெரிய கோயில் உள்ளது. இத்தலத்தில் மூலவருக்கு பின்னால் வாமனர் அருளுகிறார்.
வாமணர்
[Gal1]
மாவலி மன்னனிடம், மாற்றுரு கொண்டுவந்த மாலவன் மூன்றடி நிலம் கேட்க, அவனும் சம்மதிக்க, மாலவன் பேருருக் கொண்டு நிலவுலகு முழுவதும் ஓரடியால் அளந்து, விண்வெளி முழுதும் மறு அடியால் அளந்து மூன்றாம் அடியை எங்கே வைப்பது என மாவலியிடம் கேட்டதாகவும், அவன் அதைத் தனது தலையில் வைக்குமாறு கூறிப் பணிந்ததாகவும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் கற்சிலையாக, மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது.



கோயில்களில், பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பார்! அமர்ந்த கோலத்தில் இருப்பார்! படுத்த வண்ணம் இருப்பார்!நின்றான், இருந்தான், கிடந்தான் என்று இந்தத் திருக்கோலங்களைப் போற்றுவோம்!


நடந்தான்-என்றொரு கோலமும் இருக்கிறது.!  காலைத் தூக்கி நடக்கும் பாவனையில்! அந்தக் கோலத்தைக் காண்பது மிகவும் அரிது! ஓரிரண்டு ஆலயங்கள் மட்டும் தான்!
அதில் திருக்கோவிலூர் மிக முக்கியமான ஒன்று.
பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கிற கோலம்.

கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன.



பொய்கையாழ்வார் ஒரு நூறு வெண்பாவும்,
அதே போல் பூதத்தாழ்வார் ஒரு நூறு, பேயாழ்வார் ஒரு நூறும் பாடினர்.
- இந்த முன்னூறும் தான் தமிழ் வேதங்களின் துவக்கம்!
- அது துவங்கிய இடம்- திருக்கோவிலூர்!

கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் நகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.




கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக்
குழாவரி வண்டுஇசை படும்பாடல் கேட்டு
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே
-திருமங்கை ஆழ்வார் பாசுரப்படி வயல்களில் இனிமையான கரும்பும்,புன்னை மரங்களின் குளிர் சோலையும் வரவேற்பது கண்கொள்ளாக்காட்சி..


நல்ல பதவிகளை அடைய விரும்புவர்கள்,பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு.

கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை நிறைவேறுகின்றன.
இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக இருப்பதால் சத்ருக்கள் (எதிரிகள் ) தொல்லை நீங்கும்.
[Gal1]
மூலவர் சிறப்பு : அரசன் மகாபலி சக்ரவர்த்தியின் ஆணவத்தை அடக்க குள்ளமாக வந்து பின் விசுவரூபமெடுத்து வலது காலில் ஆகாயத்தை அளந்த படியும், இடது காலில் பூமியில் நின்றபடியும் அருள்பாலிக்கிறார்.வழக்கமாக அனைத்து பெருமாள் கோயிலிலும் விஷ்ணு வலக்கையில் சக்கரமும், இடக்கையில் சங்கும் வைத்திருப்பார். 

இங்குள்ள பகவான் மகாபாக்கியசாலியான மகாபலியை தன்னுடன் இணைத்துக் கொண்ட மகிழ்ச்சியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார்.இப்படி காட்சி தருவது பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குவதாக ஐதீகம்.

தனது வலது கையில் ஒன்று , மூன்றாவது அடி எங்கே என கேட்பது போல அமைந்திருக்கும். தூக்கியிருக்கும் விஷ்ணுவின் வலது காலை பிரம்மா ஆராதனை செய்கிறார்..மகாபலி மன்னனை ஆட்கொள்ள குள்ள வடிவமுள்ள வாமனராக வந்த பெருமாள், விஸ்வரூபம் எடுத்தார். 

இந்த விஸ்வரூப காட்சியைக் காண மிருகண்டு என்னும் முனிவருக்கு விருப்பம் ஏற்பட்டது. அவர் பிரம்மாவிடம் இதுபற்றி ஆலோசனை கேட்டார். பூவுலகில் கிருஷ்ணபத்ரா நதிக்கரையில் உள்ள கிருஷ்ண க்ஷேத்திரத்தில் (தற்போதைய திருக்கோவிலூர்) தவம் செய்தால், அந்த தரிசனம் கிடைக்கும் என்றார் பிரம்மா. அதன்படி முனிவர் தன் மனைவி மித்ராவதியுடன் பல காலம் இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். அத்தலத்துக்கு வருவோருக்கு அன்னதானத்தையும் அந்த தம்பதியர் அளித்து வந்தனர். 

ஒருநாள் விஷ்ணு இவரை சோதிக்க வயோதிக அந்தணர் வடிவில் வந்து அன்னம் கேட்டார். அன்று அவர்களிடம் உணவு ஏதும் மிச்சமில்லை. மிருகண்டு முனிவர் தன் மனைவியிடம், வந்தவருக்கு இல்லை என சொல்லாமல், ஏதாவது ஏற்பாடு செய்யும்படி கூறினார். வீட்டிலோ ஒரு பொட்டு நெல்மணி கூட இல்லை. எனவே, கணவருக்குத் தவிர வேறு சேவை செய்தே அறியாத கற்பில் சிறந்த அப்பெண்மணி, நாராயணனை நினைத்து ஒரு பாத்திரத்தை கையில் எடுத்தாள். ""நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மையானால், இந்த பாத்திரம் நிரம்பட்டும்,'' என்றாள். உடனடியாக அதில் அன்னம் நிரம்பியது. அப்போது, அந்தணர் வடிவில் வந்த பெருமாள், அவர்களுக்கு விஸ்வரூப தரிசனத்தை காட்டியருளினார்.

முதல் ஆழ்வார்கள் மூவர் : பெருமாளை புகழ்ந்து பாடிய முதலாழ்வார்களான பொய் கையாழ்வார்,பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் இத்தலத்து பெருமாளைத்தான் முதன் முதலாகப் பாடினர். ஒரு முறை இம்மூவரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருக்கோவிலூரை அடைந்தனர். இவர்களை ஒன்று சேர்க்க நினைத்த பெருமாள், பெரும் மழையை பெய்விக்கச் செய்தார். முதலில் இத்தலம் வந்த பொய்கையாழ்வார், மிருகண்டு மகரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்து, அங்கே தங்குவதற்கு இடமுண்டா என கேட்டார். 

அதற்கு முனிவர் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம் என கூறி சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த பூதத்தாழ்வார், தாம் தங்குவதற்கும் இடமுண்டா என வினவினார். அதற்கு பொய்கையாழ்வார் ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம் என்று கூறி அழைத்துக் கொண்டார். இன்னும் சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் அங்கு வந்தார். தனக்கும் உள்ளே இடம் வேண்டும் என கேட்க, ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம். மூவர் நிற்கலாம் எனக் கூறி அவரையும் உள்ளே இழுத்துக் கொண்டனர். 

இப்படியாக மூவரும் நின்று கொண்டிருக்கையில், நாலாவதாக ஒருவர் வந்து மூவரையும் நெருக்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது. "இதென்ன விந்தை!' என அவர்கள் ஆச்சரியப்பட்ட போது, பேரொளியாக தோன்றிய பெருமாள் தன் திருமேனியை மூவருக்கும் காட்டியருளினார். மூன்று ஆழ்வார்களும் இத்தலத்தில் தான் முக்தி பெற்றனர்.

மூவருக்கும் நெருக்கி, நெருக்கி, கும்மிருட்டில் காட்சி கொடுத்தான் இறைவன்!
அவர்களும் புறத்தூய்மை, அகத்தூய்மை என்னும் இரு விளக்குகளும் ஏற்றினார்கள்; அதனால், அவனைக் காணப் பெற்றார்கள்!
இடைக்கழியில் (தேகளியில்) தோன்றியதால் தேகளீசன் என்ற இன்னொரு பெயர், திருக்கோவிலூர் பெருமாளுக்கு!

 
மூன்றடி மண் கேட்ட பெருமாள் என்பதால் இங்கு உலகளந்த பெருமாள் என்று போற்றப்படுகிறார். இங்கு ஷேத்திராபதி வேணுகோபால் ஆவார். மூலவர் திருமேனி தாருவால்(மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. வழக்கத்துக்கு மாறாக பெருமாள் வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருவது சிறப்பு. 108 வைணவத் தலங்களில் இங்கு மட்டும் தான் சுயம்பு விஷ்ணு துர்க்கை உள்ளது. இது நடுநாட்டுத் திவ்ய தேசங்களில் முக்கியமானது ஆகும். 192 அடியில் அமைந்த தமிழ் நாட்டின் மூன்றாவது கோபுரம் இங்கு அமைந்துள்ளது. அசுர குரு சுக்கிராச்சாரியாருக்கு இங்கு உருவம் இருக்கிறது. நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன்முதலில் பாடப்பட்டது என்பது மிக குறிப்பிடத்தக்க சிறப்பு

அண்ணன் அருகில் தங்கை :பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை  அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.பெருமாளை மட்டுமே பாடும் திருமங்கையாழ்வார், இத்தலத்தில் துர்க்கையையும் (மாயை) சேர்த்து 
"விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்' என்று புகழ்ந்து பாடுகிறார். இவளுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்பதும், சகோதர சகோதரிகள் உறவு பலப்படும் என்பதும் நம்பிக்கை.



 பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோயில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.




திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இது முதலாவது தலம். கோயில் நுழைவு வாயிலின் வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

இவரை தரிசித்த பின் தான் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும்.  மணவாள மாமுனிகளும் இத்தல பெருமாளை பாடியுள்ளார். பரசுராமர் இங்கு தவம் செய்ததாக புராணங்களும், அகத்தியர் தவம் செய்ததாக தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன. புராண காலத்து கிருஷ்ணபத்ரா நதியே தற்போது "தென்பெண்ணை' என்ற பெயரில் ஓடுகிறது. "வெண்ணெய் உருகும் முன்பே பெண்ணை உருகும்' என்ற பழமொழி உண்டு.

மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான்.
அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன(குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார்.ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக் கொள்கிறான்.



அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகா பலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.
:

பங்குனி மாதம் - பிரம்மோற்ஸவம் -15 நாட்கள் நடைபெறும். பஞ்சபர்வ உற்ஸவமும் ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார் வெள்ளிக் கிழமை ஊஞ்சல் உற்ஸவமும் நடைபெறும்.இத்திருவிழா இத்தலத்தின் மிக சிறப்பான விழா ஆகும்.



இத்திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் வந்து பெருமாளை வழிபடுவர். மாசி மாதம் - மாசி மக உற்சவம் - இவ்விழாவின் போது பெருமாள் கடலூருக்கு தோளிலேயே செல்வார் என்பது சிறப்பு. புரட்டாசி - பவித்திர உற்சவம் - நவராத்திரி உற்சவம் சித்திரை - ஸ்ரீ ராமநவமி உற்சவம், ஸ்ரீ ராமனுஜர் ஜெயந்தி , வசந்த உற்சவம் வைகாசி - விசாக கருட சேவை,

நம்மாழ்வார் சாற்றுமுறை ஆனி- பெரியாழ்வார் சாற்று முறை ஆடி- திருவாடிப்பூரம், ஆண்டாள் உற்சவம் ஆவணி - ஸ்ரீ ஜெயந்தி, உறியடி உற்சவம் ஐப்பசி - முதலாழ்வார் சாற்றுமுறை , ஸ்ரீ மணவாள மாமுனிகள் 10 நாட்கள் உற்சவம் கார்த்திகை - கைசிக ஏகாதசி உற்சவம், திருக்கார்த்திகை தீப உற்சவம்


மார்கழி - பகல் பத்து , இராப்பத்து (வைகுண்ட ஏகாதசி) இவை தவிர வருடத்தின் விசேஷ நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது கோயிலில் பெருமாளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமாளை வணங்குவார்கள்.




















Friday, August 12, 2011

நடராஜ சிலை


ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது.
ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம்.

இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும் உமையும் தன்னில் பாதி என்கிறானோ?
முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.

பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தில் ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்!
அவற்றில்:
சேஷநாகம் - கால சுயற்சியையும்
கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும்
கங்கை - அவன் வற்றா அருளையும்
ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும்
குறிக்கின்றன.

பின் இடது கரத்தில் அக்னி, சிவன் – சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் முதல் எழுத்தான ‘ந’ வைக் குறிக்கிறது இந்தக் கரம்.
ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, ‘ம’ என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.

வலது காலின் கீழே இருப்பது அசுரன் – ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி.

தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.
முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான ‘வா’ வை குறிக்கிறது.

இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் – அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது.
பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான ‘சி’ யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.

அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, ‘அஞ்சாதே’ என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான ‘ய’ வை காட்டுகிறது. ஆடல் வல்லான் நமக்கெல்லாம் அபயம் தர வல்லான்! ஆக்கமும், காத்தலும் அவன் வழி வகுத்தலே! எத்தனைப் பிறவி வருமோ என்று பதறுவார், எம் ஐயன், அல்லல் எனும் மாசறுத்து ஆட்கொளும் தெய்வமாம், தில்லை நகர் வாழ், அதிபதி ஜனகாதி துதிபதி சிவகாமி அன்பில் உறையும் நடனபதியின் வலது கரத்தை பார்த்தால் போதாதோ?
நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம்.

இந்த நாகம் – சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது!
பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே ‘மகாகாலம்’. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் ‘இரட்டைத் தாமரை’ பீடத்தின் பெயர் ‘மஹாம்புஜ பீடம்’. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்!

அவனே ஆண்டவன். எல்லாப் பொருளிலும் அரூபமாய் மறைந்திருப்பவன். எல்லாப் பொருளுக்கும் மெய்ப்பொருளாய் இருப்பவன். அவன் ஆக்கத்தினை கூர்ந்து நோக்கியவாறு, எல்லா ஆக்கத்திலும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறான். அவனே எங்கும் தூய உயர் ஞானமாய் இருக்கிறான்.
- யஜூர் வேதம், ஸ்வேதஸ்வதார உபநிஷதம்
ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.
- பன்னிரெண்டாம் திருமுறை

Friday, June 24, 2011

விருத்தகிரீஸ்வரர்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்

திருமணிமுத்தாற்றின் மேற்குக் கரையில், விருத்தாசலத்தின் தொன்மையான ஆலயம் அமைந்திருக்கிறது.

பொங்கி வந்த வெள்ளத்தை பழமலைநாதர் தமது திருக்கரத்தால் தீண்டி, மணிமுத்தாறாகத் திகழுமாறு அருள் புரிந்ததால், ஆறு புனிதமானது. இந்நதியினில் இறந்தவர்களின் எலும்புகளை விட்டால், அந்த எலும்புகளுக்குரியவர் நற்கதி அடைந்து விடுவார்கள் என்றொரு நம்பிக்கை. இதனாலேயே, ‘காசிக்கு சீலம் அதிகம் விருத்தாசலம்’ என்று சொல்லப்படுகிறது.
பிரம்மன் தொழுத இறைவனுக்கு இங்கு ஆலயம் எழுந்த வரலாறும் சுவையானது.

இறைப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட விபசித்து என்றொரு முனிவர், முதுகுன்றத்து வனத்தில் ஒரு மரத்தடியில் தவமிருந்தார்.

ஒருநாள்...

வனத்தில் இருந்த தெய்வச்சுனையில் நீராட வந்தாள் குபேரனின் தங்கை, நீராடுமுன் அணிகலன்களைக் கழற்றிக் கரையில் வைத்தாள். சிச்சிலிப் பறவை ஒன்று அவளது மாணிக்க மூக்குத்தியை இரை என்று எண்ணிக் கொத்திப் பறந்தது.

தனக்குப் பயனில்லை என அறிந்ததும், பறவை மூக்குத்தியைத் தவற விட்டது. அது ஆழ்தவத்தில் ஈடுபட்டிருந்த விபசித்தின் மடியில் விழுந்தது.

குபேரனின் தங்கையோ மாணிக்க மூக்குத்தியை தன்னிடம் ஒப்படைப்பவருக்குத் தனது அங்கத்தின் மற்ற அணிகலன்களை அன்பளிப்பாக அளிப்பதாக அறிவித்தாள்.

இது தெரியாமல், விபசித்து முனிவர் மூக்குத்தியை உரியவரிடம் ஒப்படைக்கும் நோக்கில் அவளை நாடி வந்தார். அறிவித்தபடி குபேரனின் தங்கை தனது அணிகலன்களை அன்பளிப்பாக அவரிடம் அளித்தாள்.

‘பொன்னார் மேனியனை நாடி வந்தனுக்குப் பொன் எதற்கு?’ என்று முனிவர் திகைத்தார்.

‘அவற்றைக் கொண்டு எனக்கொரு ஆலயத்தை எழுப்பு’ என அசரீரியாக ஆண்டவன் அவரைப் பணித்தான்.

முனிவரும், அணிகலன்களை வன்னி மரப்பொந்தினுள் வைத்துக் காத்து ஆண்டவனுக்கோர் ஆலயம் எழுப்பினார்.

ஆ தியில் பிரம்மன் அவனியை ஆக்கும் முனைப்பில், முதற்கண் நீரைப் படைத்தார். அடுத்து நெடும் நிலப்பரப்பை உருவாக்க முனைந்த போது, அசுரர்களான மதுகைடபர்கள் அவருக்கு அல்லல்கள் அளித்தனர். நான்முகன், நாராயணனை வேண்ட, மாலனும், மதுகைடபர்களை வெட்டி வீழ்த்தினார்.
நீரில் மிதந்த அந்த அசுரர்களின் உடற் பகுதிகள் இறுகி மண்ணுலகாய் மாறுவதற்கு மகேசுவரன் அருளினார்.

நீரும், நிலமுமாக உலகு உருவானது, அதனை அத்தனை அழகுடன் தானே படைத்து விட்டதாக அயனுக்கு ஆணவம் மிகுந்தது. அந்த ஆணவத்தை அடக்க மகேசன் தானே மாபெரும் மலையாக உருமாறி உலகெங்கும் வியாபித்து நின்றார்.

பிரம்மன் தான் படைத்த மலைகளை வைக்க இடமின்றித் தவித்தார். அவரது ஆணவத்தை அடக்க உருத்திரனே மலையாக உருவெடுத்து உலகை ஒளித்து உயர்ந்து நிற்கிறார் என்ற உண்மையை ஆனைமுகன் அயனிடம் அறிவிக்க பிரம்மனின் பித்தம் தெளிந்தது. ஆணவம் அழிந்தது.

மகேசனைப் பணிந்தார். தான் உருவாக்கிய மலைகளுக்கு இடம் அளிக்கச் சொல்லி இறைஞ்சினார். அவரை மன்னித்து, சிவன் தன்னைக் குறுக்கிக் கொண்டதோடு அகிலத்தின் அச்சாணியாக இத்தலம் விளங்கும் என்றும் அருளினார்.

பூவுலகில் தோன்றிய அந்த முதல் மலை விருத்தாசலம் என்று பெயர் கொண்டது. விருத்தாசலம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு பழமையான மலை என்று பொருள். அங்கு எழுந்தருளிய ஈசனை விருத்தகிரீசுவரர் என்று பிரம்மன் வணங்கி வழிபட்டார்.

முதுகுன்றம் என்று பைந்தமிழில் பாடப்பெற்றுள்ள இத்தலத்தின் ஈசன் பழமலைநாதர் என்று அன்புடன் அழைக்கப்பெறுகிறார்.

ஐந்தெழுத்து நமசிவாய மந்திரம் சிவபக்தர்களுக்கு உயிர்மூச்சு. அதைக் குறிப்பது போல், ஆலயத்துக்கு ஐந்து பிராகாரம், ஐந்து கோபுரம், ஐந்து நந்தி, ஐந்து கொடிமரம், ஐந்து தீர்த்தம் என்று சிறப்புற அமைந்துள்ளன. கிழக்கு இராஜகோபுரம் வழியே ஆலயத்துள் நுழைந்தால், முதலில் தீபாராதனை மண்டபம். அடுத்து நூறுகால் மண்டபம். இதன் மத்தியில் பலிபீடம், கொடிமரம், நந்தி.
நூற்றுக்கால் மண்டபத்தின் வடபுறமுள்ள சித்திர மண்டபத்தின் இருபுறங்களிலும் மண்டபத்தையே, சக்கரங்கள் இணைக்கப்பட்ட ரதமாக அமைத்து குதிரைகள் இழுப்பது போன்ற சிற்ப அமைப்பு. நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள்.

தென்மேற்கில் ஆழத்துப் பிள்ளையார் சந்நிதி. இவருக்குத் தனி கோபுரம். தனிக்கொடி மரம். பழமையின் உண்மை நிலையை பிரம்மனுக்கு உரைத்தவர் இந்தப் பள்ளத்து கணபதி. ஆழத்துப் பிள்ளையாரை தரிசித்து படியேறி வலம் வந்தால், வடமேற்கு மூலையில் இருபத்தெட்டு ஆகமங்களைக் குறிக்கும் இருபத்தெட்டு சிவலிங்கங்கள்.
முதல் பிராகாரமான தேரோடும் வீதி, கால ஓட்டத்தில் சுருங்கிவிட்டது. இரண்டாவது பிராகாரமும் ஆலயத்துக்கு வெளியில் அமைந்திருக்கிறது. மூன்றாவது பிராகாரம் முக்கியமான கைலாயப் பிராகாரம்.
கைலாயப் பிராகாரத்தின் நான்கு பக்கங்களிலும் உயரிய நான்கு கோபுரங்கள். ஒவ்வொரு கோபுர வாயிலின் உள்பகுதியிலும், நடன மாந்தரின் எழுபத்திரண்டு வகை புடைப்புச் சிற்பங்கள்.
கைலாயப் பிராகாரத்திலிருந்து கோயிலின் உள் செல்லும் கிழக்கு வாயிலில் கண்டராதித்தன் கோபுரம். இதனைக் கடந்தால் நான்காம் பிராகாரமான வன்னிடியப் பிராகாரம். தல விருட்சமான வன்னிய மரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இங்கே உள்து. விபசித்து முனிவருக்குக் கற்பகத்தருவாக இருந்த இந்த மரத்தின் கீழ் அவரது திருமேனி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
வடக்குப் பகுதியில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கிறாள் பெரியநாயகி. கருவறையில் அன்னை கருணை ததும்பும் இன்முகத்துடன் நின்ற கோலத்தில் கனிவுடன் அருள் வழங்குகிறாள்.
கைலாயப் பிராகாரத்திலிருந்து கருவறை நோக்கிச் செல்லும் வழியில் பலிபீடமும், நந்தியும் அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தின் வாயிலில் பிரமிக்க வைக்கும் வடிவில் டிண்டி, முண்டி என்னும் துவராபாலகர்கள்.
கருவறையில், தீப ஒளியில் பழமலலைநாதர் சிவலிங்க வடிவில் அற்புதமாக அருள்பாலிக்கிறார். சதாசிவ வடிவத்தின் மேல் ருத்திராட்சப் பந்தல் போடப்பட்டுள்ளது. பூவுலகை ஆதியில் அமைத்த ஈசனைப் பணிகையில் பரவசம் கூடுகிறது.

கருவறையைச் சுற்றி வரம் பிராகாரம் ஐந்தாம் பிராகாரம். பழமலைநாதர் தனக்களித்த பன்னீராயிரம் பொன்னை இங்கே மணிமுத்தாறில் போட்டு விட்டு, ஈசன் அருளாலேயே திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் திரும்பப் பெற்றார் சுந்தரர். இரு தலங்களிலும் பொன்னின் மாற்றை சோதித்துச் சொல்ல விநாயகர் முன்வந்தார். இரு தலங்களிலும் இந்தப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
கருவறை கோஷ்டத்தில் வேறெங்கும் காண இயலா எழில் கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர்.

சித்தர்கள், துறவிகள், அகத்தியர், சுக்கிராச்சாரியார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகளார் போன்ற புனிதர்கள் பழமலைநாதனை தரிசிக்க வந்த திருத்தலம் இது.

Friday, May 20, 2011

கீதா மாஹாத்மியம் (கீதையின் பெருமை)

ध्यानश्लोका:
ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं।
व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतं॥
अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशा ध्यायिनीमम्ब।
त्वामनुसंदधामि भगवद् गीते भवद्वेषिणीम्॥
ஓம் பார்தா²ய ப்ரதிபோ³தி⁴தாம் ப⁴க³வதா நாராயணேந ஸ்வயம்|
வ்யாஸேந க்³ரதி²தாம் புராணமுநிநா மத்⁴யே மஹாபா⁴ரதம்||
அத்³வைதாம்ருதவர்ஷிணீம் ப⁴க³வதீமஷ்டாத³ஸா² த்⁴யாயிநீமம்ப³|
த்வாமநுஸந்த³தா⁴மி ப⁴க³வத்³ கீ³தே ப⁴வத்³வேஷிணீம்||
பார்தா²ய = பார்த்தனுக்காக
ப⁴க³வதா நாராயணேந = பகவான் நாராயணனால்
ஸ்வயம் ப்ரதிபோ³தி⁴தாம் = தானே உபதேசித்தது
புராணமுநிநா வ்யாஸேந = பழமையான முனிவர் வியாசரால்
மஹாபா⁴ரதம் மத்⁴யே க்³ரதி²தாம் = மகாபாரதத்தின் நடுவே தொகுக்கப் பட்டது
அம்ப³! ப⁴க³வத்³ கீ³தே! = தாயே! பகவத் கீதே!
அஷ்டாத³ஸ² அத்⁴யாயிநீம் = பதினெட்டு அத்தியாயம் கொண்டவளே!
அத்³வைத அம்ருத வர்ஷிணீம் = அத்வைத அம்ருதத்தை மழையாகப் பொழிபவளே!
ப⁴க³வதீம் = இறைவியே!
ப⁴வத்³வேஷிணீம் = பிறப்பை நீக்குபவளே!
த்வாம் அநுஸந்த³தா⁴மி = உன்னை தியானிக்கிறேன்

नमोऽस्तुते व्यास विशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र।
येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो झानमयः प्रदीपः॥
நமோऽஸ்துதே வ்யாஸ விஸா²லபு³த்³தே⁴ பு²ல்லாரவிந்தா³யதபத்ரநேத்ர|
யேந த்வயா பா⁴ரததைலபூர்ண​: ப்ரஜ்வாலிதோ ஜ்ஞா²நமய​: ப்ரதீ³ப​:||
வ்யாஸ = வியாச பகவானே!
விஸா²லபு³த்³தே⁴ = விசாலமான ஞானம்/புத்தி கொண்டவரே!
பு²ல்ல அரவிந்த³ அயத பத்ர நேத்ர = பூத்த தாமரை இதழ்கள் போன்ற கண்கள் கொண்டவரே!
த்வயா = உங்களால்
யேந பா⁴ரத = இந்த மகா பாரதம்
தைல பூர்ண​: = எண்ணை ஊற்றப் பட்டு நிறைந்து உள்ள
ஞா²நமய​: ப்ரதீ³ப​: = ஞானமயமான ஒளி பரப்பும் விளக்கென
ப்ரஜ்வாலித: = ஒளிர்கிறது
தே நம: அஸ்து = உங்களுக்கு வணக்கங்கள்

प्रपन्नपारिजाताय तोत्रवेत्रैकपाणये।
ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः॥
ப்ரபந்நபாரிஜாதாய தோத்ரவேத்ரைகபாணயே|
ஜ்ஞாநமுத்³ராய க்ருஷ்ணாய கீ³தாம்ருதது³ஹே நம​:||
ப்ரபந்ந பாரிஜாதாய = அண்டியவர்களுக்கு வேண்டியதைத் தரும் பாரிஜாத கற்பக விருட்சமான
தோத்ர வேத்ர ஏக பாணயே = ஒரு கையில் தேரோட்டும் சாரதியாக சாட்டை கம்புடனும்
ஜ்ஞாநமுத்³ராய = (இன்னொரு கையில்) ஞானத்தின் சின்னத்தை முத்திரையாக பிடித்து கொண்டிருக்கும்
கீ³த அம்ருத து³ஹே = கீதை என்னும் அமுதத்தை கறந்து தருகின்ற
க்ருஷ்ணாய நம​: = ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வணக்கங்கள்

वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम्।
देवकीपरमानन्दं कृष्णं वन्दे जगद् गुरूम्॥
வஸுதே³வஸுதம் தே³வம் கம்ஸசாணூரமர்த³நம்|
தே³வகீபரமாநந்த³ம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரூம்||
வஸுதே³வஸுதம் = வசுதேவரின் பிள்ளையான
தே³வம் = தேவனான
கம்ஸசாணூரமர்த³நம் = கம்சன் சாணுரன் ஆகியோரை அழித்தவனான
தே³வகீபரமாநந்த³ம் = தேவகியின் பரம ஆனந்தமான
க்ருஷ்ணம் = க்ருஷ்ணனனை
ஜக³த்³ கு³ரூம் வந்தே³ = உலகாசிரியனை வணங்குகிறேன்


भीष्मद्रोणतटा जयद्रथजला गान्धारनीलोत्पला।
शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला।।
अश्वत्थामविकर्णघोरमकरा दुर्योधनावर्तिनी।
सोत्तीर्णा खलु पाण्डवै रणनदी कैवर्तकः केशवः।।
பீ⁴ஷ்மத்³ரோணதடா ஜயத்³ரத²ஜலா கா³ந்தா⁴ரநீலோத்பலா|
ஸ²ல்யக்³ராஹவதீ க்ருபேண வஹநீ கர்ணேந வேலாகுலா||
அஸ்²வத்தா²மவிகர்ணகோ⁴ரமகரா து³ர்யோத⁴நாவர்திநீ|
ஸோத்தீர்ணா க²லு பாண்ட³வை ரணநதீ³ கைவர்தக​: கேஸ²வ​:||
பீ⁴ஷ்ம த்³ரோண தடா = பீஷ்மரும் துரோணரும் இரு கரைகளாகவும்
ஜயத்³ரத²ஜலா = ஜயத்ரதன் அதன் நீராகவும்
கா³ந்தா⁴ர நீலோத்பலா = காந்தாரன் அதில் பூத்த அல்லி மலராகவும்
ஸ²ல்யக்³ராஹவதீ = சல்யன் சுறா மீனாகவும்
க்ருபேண வஹநீ = கிருபன் அதன் வேகமாகவும்
கர்ணேந வேலாகுலா = கர்ணன் அதில் எழும்பும் அலையாகவும்
அஸ்²வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா: = அஸ்வத்தாமன் விகர்ணன் ஆகியோர் கோரமான திமிங்கலம் போன்ற மீன்களாகவும்
து³ர்யோத⁴ந ஆவர்திநீ = துர்யோதனன் அதன் சுழல்களாகவும்
ஸா ரணநதீ³ = இருக்கும் அந்த போர் நதி
பாண்ட³வை: = பாண்டவர்களால்
உத்தீர்ணா = கடக்கப் பட்டது
கேஸ²வ​: கைவர்தக​: க²லு = (ஏனெனில்) கேசவன் படகோட்டி அல்லவோ !

पाराशर्यवचः सरोजममलं गीतार्थगन्धोत्कटं।
नानाख्यानककेसरं हरिकथासम्बोधनाबोधितम्।।
लोके सज्जनषट्पदैरहरहः पेपीयमानं मुदा।
भूयाद्भारतपङ्कजं कलिमलप्रध्वंसिनः श्रेयसे।।
பாராஸ²ர்யவச​: ஸரோஜமமலம் கீ³தார்த²க³ந்தோ⁴த்கடம்|
நாநாக்²யாநககேஸரம் ஹரிகதா²ஸம்போ³த⁴நாபோ³தி⁴தம்||
லோகே ஸஜ்ஜநஷட்பதை³ரஹரஹ​: பேபீயமாநம் முதா³|
பூ⁴யாத்³பா⁴ரதபங்கஜம் கலிமலப்ரத்⁴வம்ஸிந​: ஸ்²ரேயஸே||
பாராஸ²ர்ய வச​: ஸரோஜம் = பராசரரின் மகன் (வியாசன்) வார்த்தைகளில் நீரில் பூத்த தாமரையாகவும்
கீ³த அர்த² க³ந்த⁴: உத்கடம் = கீதையின் உபதேசங்கள் அதன் நறுமணமாகவும்
நாநாக்²யாநக கேஸரம் = பல்வேறு கதைகள் பின்னிப் பிணைந்த தாமரைத் தண்டுகளாகவும்
ஹரிகதா² ஸம்போ³த⁴நா போ³தி⁴தம்= ஹரியின் கதைகளே அத்தாமரையின் விரிந்து அகன்ற இதழ்களாகவும்
லோகே = இவ்வுலகில்
அஹரஹ​: = ஒவ்வொரு நாளும்
ஸஜ்ஜந ஷட்பதை³ = நல்ல மனிதர்களான தேனீக்களால்
முதா³ = மகிழ்ச்சியாக
பேபீயமாநம் = அருந்தப் படுவதும்
கலிமலப்ரத்⁴வம்ஸிந​: = கலி என்னும் மலம் (தீங்கைத்) தொலைப்பதாகவும்
அமலம் = குற்றமில்லாததும்
பா⁴ரத பங்கஜம் = ஆகிய பாரதம் என்னும் தாமரையால்
ஸ்²ரேயஸே பூ⁴யாத் = நன்மை விளையட்டும்

मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिम्।
यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम्॥
மூகம் கரோதி வாசாலம் பங்கு³ம் லங்க⁴யதே கி³ரிம்|
யத்க்ருபா தமஹம் வந்தே³ பரமாநந்த³மாத⁴வம்||
யத் க்ருபா = எவருடைய கருணையால்
மூகம் = ஊமையும்
வாசாலம் = பேசும் திறன்
கரோதி = அடைகிறானோ
பங்கு³ம் = ஊனமுற்றவனும்
கி³ரிம் லங்க⁴யதே = மலை ஏறும் திறனுடையவனாகிறானோ
தம் பரமாநந்த³மாத⁴வம் = அந்த பரமானந்தம் தரும் மாதவனை
அஹம் வந்தே³ = நான் வணங்குகிறேன்

अथ गीतामाहात्म्यम्
गीताशास्त्रमिदं पुण्यं यः पठेत् प्रयतः पुमान्।
विष्णोः पदमवाप्नोति भयशोकादिवर्जितः ।।
கீ³தாஸா²ஸ்த்ரமித³ம் புண்யம் ய​: படே²த் ப்ரயத​: புமாந்|
விஷ்ணோ​: பத³மவாப்நோதி ப⁴யஸோ²காதி³வர்ஜித​: ||
இத³ம் புண்யம் = இந்த புண்ணியமான
கீ³தா ஸா²ஸ்த்ரம் = கீதா சாத்திரத்தை
ய​: புமாந் = எந்த மனிதர்
ப்ரயத​: படே²த் = முயற்சி செய்து படிக்கிறாரோ (அவர்)
ப⁴யஸோ²காதி³ = பயம், சோகம் ஆகியவை
வர்ஜித​: = நீங்கி
விஷ்ணோ​: பத³ம் = விஷ்ணுவின் பதத்தை
அவாப்நோதி = அடைகிறார்.

गीताध्ययनशीलस्य प्राणायामपरस्य च।
नैव सन्ति हि पापानि पूर्वजन्मकृतानि च।।
கீ³தாத்⁴யயநஸீ²லஸ்ய ப்ராணாயாமபரஸ்ய ச|
நைவ ஸந்தி ஹி பாபாநி பூர்வஜந்மக்ருதாநி ச||
கீ³தா அத்⁴யயந ஸீ²லஸ்ய = (எவர்) எப்போதும் கீதையை ஓதிக்கொண்டும்
ப்ராணாயாமபரஸ்ய ச = மூச்சை அடக்கி யோகத்திலும் திளைக்கிறாரோ அவரிடம்
பாபாநி = பாவங்கள்
பூர்வஜந்மக்ருதாநி ச ஏவ = கடந்த ஜன்ம செயல்களின் விளைவுகளும்
ந ஸந்தி = இருப்பதில்லை

मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने।
सकृद्गीताम्भसि स्नानं संसारमलनाशनम्॥
மலநிர்மோசநம் பும்ஸாம் ஜலஸ்நாநம் தி³நே தி³நே|
ஸக்ருத்³கீ³தாம்ப⁴ஸி ஸ்நாநம் ஸம்ஸாரமலநாஸ²நம்||
பும்ஸாம் = மனிதர்கள்
தி³நே தி³நே = தினந்தோறும்
ஜலஸ்நாநம் = நீரில் குளிப்பதால்
மலநிர்மோசநம் = உடல் அழுக்கு அகற்றப் படுகிறது
ஸக்ருத் = ஒரு தடவை
கீ³தா அம்ப⁴ஸி ஸ்நாநம் = கீதை என்னும் நீரில் குளிப்பதால்
ஸம்ஸாரமலநாஸ²நம் = சம்சாரம் என்னும் மாசு நீங்குகிறது.

गीता सुगीता कर्तव्या किमन्यैः शास्त्रविस्तरैः।
या स्वयं पद्मनाभस्य मुखपद्माद्विनिःसृता॥
கீ³தா ஸுகீ³தா கர்தவ்யா கிமந்யை​: ஸா²ஸ்த்ரவிஸ்தரை​:|
யா ஸ்வயம் பத்³மநாப⁴ஸ்ய முக²பத்³மாத்³விநி​:ஸ்ருதா||
பத்³மநாப⁴ஸ்ய = பத்மநாபனின்
ஸ்வயம் முக²பத்³மாத் = தன்னுடைய முகத்தாமரையிலிருந்து
யா விநி​:ஸ்ருதா = எது வெளிவந்ததோ
ஸுகீ³தா = கேட்க இனிமையானதோ
கீ³தா = அந்த கீதை
கர்தவ்யா = படிக்கப் படவேண்டும்
அந்யை​: = வேறு
ஸா²ஸ்த்ரவிஸ்தரை​: கிம் = சாத்திரங்களை விரிவாக (படிக்க வேண்டும்) எதற்கு?

भारतामृतसर्वस्वं विष्णोर्वक्त्राद्विनिःसृतम्।
गीतागङ्गोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते॥
பா⁴ரதாம்ருதஸர்வஸ்வம் விஷ்ணோர்வக்த்ராத்³விநி​:ஸ்ருதம்|
கீ³தாக³ங்கோ³த³கம் பீத்வா புநர்ஜந்ம ந வித்³யதே||
விஷ்ணோ: வக்த்ராத் = விஷ்ணுவினுடைய திருமுகத்தில் இருந்து
பா⁴ரத அம்ருத ஸர்வஸ்வம் = பாரதம் என்னும் அமுத களஞ்சியம்
விநி​:ஸ்ருதம் = உதித்தது
கீ³தாக³ங்கோ³த³கம் = கீதை என்னும் கங்கை நீரை
பீத்வா = குடித்தபின்
புநர்ஜந்ம ந வித்³யதே = மறுபடி ஒரு ஜன்மம் ஏற்படுவது இல்லை

सर्वोपनिषदो गावो दोग्धा गोपालनन्दनः।
पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्॥
ஸர்வோபநிஷதோ³ கா³வோ தோ³க்³தா⁴ கோ³பாலநந்த³ந​:|
பார்தோ² வத்ஸ​: ஸுதீ⁴ர்போ⁴க்தா து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்||
ஸர்வ உபநிஷத³: கா³வ: = எல்லா உபநிடதங்களும் பசுக்களாம்
தோ³க்³தா⁴ கோ³பாலநந்த³ந​: =  கண்ணனே பால்கறப்பவனாம்
பார்த²: வத்ஸ​: = பார்த்தனே கன்றாம்
ஸுதீ⁴ போ⁴க்தா = தெளிந்த அறிவுடையோரே பால் அருந்துவோர்
து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத் = அமுதமான கீதையே பால்

एकं शास्त्रं देवकीपुत्रगीतमेको देवो देवकीपुत्र एव।
एको मन्त्रस्तस्य नामानि यानि कर्माप्येकं तस्य देवस्य सेवा॥
ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீபுத்ரகீ³தமேகோ தே³வோ தே³வகீபுத்ர ஏவ|
ஏகோ மந்த்ரஸ்தஸ்ய நாமாநி யாநி கர்மாப்யேகம் தஸ்ய தே³வஸ்ய ஸேவா||
ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீபுத்ர கீ³தம் = ஒரே சாத்திரம் தேவகி மைந்தனின் வார்த்தைகள்
ஏக: தே³வ: தே³வகீபுத்ர ஏவ = தேவகியின் மைந்தனே ஒரே தெய்வம்
தஸ்ய யாநி நாமாநி ஏக: மந்த்ர: = அவரது பெயர்களே ஒரே மந்திரம்
ஏகம் கர்மா: அபி = ஒரே கடமையும் (தொழிலும்)
தஸ்ய தே³வஸ்ய = அந்த தேவனுடைய
ஸேவா = சேவை செய்தலே

अथ ध्यानम्
शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं
विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गम्।
लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं
वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्॥
ஸா²ந்தாகாரம் பு⁴ஜக³ஸ²யநம் பத்³மநாப⁴ம் ஸுரேஸ²ம்
விஸ்²வாதா⁴ரம் க³க³நஸத்³ருஸ²ம் மேக⁴வர்ணம் ஸு²பா⁴ங்க³ம்|
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகி³பி⁴ர்த்⁴யாநக³ம்யம்
வந்தே³ விஷ்ணும் ப⁴வப⁴யஹரம் ஸர்வலோகைகநாத²ம்||
ஸா²ந்தாகாரம் = அமைதி வடிவானவர்
பு⁴ஜக³ஸ²யநம் = பாம்பின் மீது துயிலுபவர்
பத்³மநாப⁴ம் = தாமரை போன்ற நாபி கொண்டவர்
ஸுரேஸ²ம் = தேவர்களின் தலைவர்
விஸ்²வாதா⁴ரம் = உலகைத் தாங்குபவர்
க³க³நஸத்³ருஸ²ம் = ஆகாயம் போன்றவர்
மேக⁴வர்ணம் = மேகத்தின் நிறத்தை ஒத்தவர்
ஸு²பா⁴ங்க³ம் = சுபமான உடலைக் கொண்டவர்
லக்ஷ்மீகாந்தம் = திருமகளின் கணவர்
கமலநயநம் = தாமரைக் கண்கள் உடையவர்
யோகி³பி⁴: = யோகிகளால்
த்⁴யாநக³ம்யம் = தியானித்து அடையப் படுபவர்
ப⁴வப⁴யஹரம் = பிறவி என்னும் பயத்தை போக்குபவர்
ஸர்வலோகைகநாத²ம் = எல்லா உலகிற்கும் தலைவர்
விஷ்ணும் = விஷ்ணுவை
வந்தே³ = வணங்குகிறேன்

यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैः स्तवैर्वेदैः।
सांगपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः॥
ध्यानावस्थिततद् गतेन मनसा पश्यन्ति यं योगिनो
यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः॥
யம் ப்³ரஹ்மா வருணேந்த்³ரருத்³ரமருத​: ஸ்துந்வந்தி தி³வ்யை​: ஸ்தவை:।
வேதை³: ​ஸாங்க³பத³க்ரமோபநிஷதை³ர்கா³யந்தி யம் ஸாமகா³​:।।
த்⁴யாநாவஸ்தி²ததத்³ க³தேந மநஸா பஸ்²யந்தி யம் யோகி³நோ।
யஸ்யாந்தம் ந விது³​: ஸுராஸுரக³ணா தே³வாய தஸ்மை நம​:।।
யம் = எவரை
ப்³ரஹ்மா வருண: இந்த்³ர ருத்³ர மருத​: = பிரம்மா வருணன் இந்திரன் உருத்திரன் மருத்துகள் எல்லாரும்
தி³வ்யை​: ஸ்தவை: = திவ்விய துதிகளால்
ஸ்துந்வந்தி = துதிக்கிறார்களோ
யம் = எவரை
ஸாமகா³​: = சாம வேதம் ஓதுபவர்கள்
ஸாங்க³ பத³ க்ரம = பத க்ரம முறைகளுடன்
உபநிஷதை³: = உபநிடதங்களாலும்
வேதை³: ​= வேதங்களாலும்
கா³யந்தி = இசைக்கிறார்களோ
த்⁴யாநாவஸ்தி²த: யோகி³ந: = தியானத்தில் நிலைபெற்ற யோகிகள்
தத்³ க³தேந மநஸா = பரவச மனதுடன்
யம் பஸ்²யந்தி = எவரைப் பார்க்கிறார்களோ
யஸ்ய அந்தம் = எவரை முழுவதுமாக
ஸுர அஸுரக³ணா: = தேவர்களும் அசுரர்களும்
ந விது³​: = அறியவில்லையோ
தே³வாய தஸ்மை நம​: = அந்த தேவனுக்கு வணக்கங்கள்

மோக்ஷ ஸந்நியாச யோகம்

மோஷ சந்நியாச யோகம்
சந்நியாசமென்றாலும் தியாகமென்றாலும் ஒன்றே. ஆனால் காம்யகர்மத்தை அடியோடு விட்டுவிடுவது சந்நியாசமென்றும் நித்திய நைமித்திக கர்மங்களில் பற்றுதலையும் பலனையும் துறப்பது தியாகமென்றும் அறிய வேண்டும்.
எல்லாக் கர்மங்களையும் அடியோடு விட்டுவிட வேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அது கீதையின் கருத்தன்று. நித்திய, நைமித்திக கர்மங்களைச் செய்தே தீரவேண்டும்; செய்யாவிடில் பாபம் நேரிடும். மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஈசுவரன் முக்கிய காரணமாவான்.

அப்படியிருக்கத் தானே அவற்றைச் செய்துவிடுவதாக நினைப்பவன் மூடன். ஞானம், கர்மம், உறுதி, இன்பம் என்றிவை ஒவ்வொன்றும் சாத்விகம், ராஜசம், தமசம் என்று மூவகைப்பட்டிருக்கும். கடவுளைத் தமக்குரிய கர்மங்களால் ஆராதித்தால் சித்தி பெறலாம். இவ்விதம் கண்ணனுடைய உபதேசத்தைக் கேட்டு அர்ஜுனன் மயக்கமற்று நல்லறிவு பெற்றுப் போர் புரியத் தொடங்கினான் என்று சஞ்ஜயன் திருதராஷ்டிரனுக்குக் கூறினான்.

अर्जुन उवाच
संन्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुम् ।
त्यागस्य च हृषीकेश पृथक्केशिनिषूदन ॥१८- १॥
அர்ஜுந உவாச
ஸந்ந்யாஸஸ்ய மஹாபா³ஹோ தத்த்வமிச்சா²மி வேதி³தும் |
த்யாக³ஸ்ய ச ஹ்ருஷீகேஸ² ப்ருத²க்கேஸி²நிஷூத³ந || 18- 1 ||
அர்ஜுந உவாச மஹாபா³ஹோ = அர்ஜுனன் சொல்லுகிறான், உயர் புயத்தோய்
ஹ்ருஷீகேஸ² = ஹ்ருஷீகேசா
கேஸி²நிஷூத³ந = கேசியைக் கொன்றவனே
ஸந்ந்யாஸஸ்ய தத்த்வம் = சந்நியாசத்தின் இயல்பையும்
த்யாக³ஸ்ய ச = தியாகத்தின் இயல்பையும்
ப்ருத²க் வேதி³தும் இச்சா²மி = பிரித்துக் கேட்க விரும்புகிறேன்
அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய், கண்ணா, கேசியைக் கொன்றாய் சந்நியாசத்தின் இயல்பையும் தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.

श्रीभगवानुवाच
काम्यानां कर्मणां न्यासं संन्यासं कवयो विदुः ।
सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणाः ॥१८- २॥
ஸ்ரீப⁴க³வாநுவாச
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது³: |
ஸர்வகர்மப²லத்யாக³ம் ப்ராஹுஸ்த்யாக³ம் விசக்ஷணா: || 18- 2 ||
ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் = விருப்பத்தால் செய்யப்படும் கர்மங்களை துறப்பது
ஸந்ந்யாஸம் கவய: விது³: = சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர்
ஸர்வகர்மப²ல த்யாக³ம் = எல்லாவிதச் செயல்களின் பலன்களையும் துறந்துவிடுதல்
த்யாக³ம் விசக்ஷணா: ப்ராஹு = தியாகமென்று ஞானிகள் கூறுவர்
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: விருப்பத்தால் செய்யப்படும் சலுகைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர். எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்துவிடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.

त्याज्यं दोषवदित्येके कर्म प्राहुर्मनीषिणः ।
यज्ञदानतपःकर्म न त्याज्यमिति चापरे ॥१८- ३॥
த்யாஜ்யம் தோ³ஷவதி³த்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண: |
யஜ்ஞதா³நதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே || 18- 3||
ஏகே மநீஷிண: = சில அறிஞர்
கர்ம தோ³ஷவத் = கர்மங்கள் அனைத்தும் குற்றம் போலே கருதி
த்யாஜ்யம் இதி ப்ராஹு = விட்டுவிடவேண்டும் என்கிறார்கள்
யஜ்ஞ தா³ந தப: கர்ம = வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை
ந த்யாஜ்யம் இதி ச அபரே = விடக்கூடாது என்கிறார்கள் வேறு சிலர்
சில அறிஞர், செய்கையைக் குற்றம் போலே கருதி விட்டுவிடவேண்டும் என்கிறார்கள். வேறு சிலர், வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது என்கிறார்கள்.

निश्चयं शृणु मे तत्र त्यागे भरतसत्तम ।
त्यागो हि पुरुषव्याघ्र त्रिविधः संप्रकीर्तितः ॥१८- ४॥
நிஸ்²சயம் ஸ்²ருணு மே தத்ர த்யாகே³ ப⁴ரதஸத்தம |
த்யாகோ³ ஹி புருஷவ்யாக்⁴ர த்ரிவித⁴: ஸம்ப்ரகீர்தித: || 18- 4||
ப⁴ரதஸத்தம = பாரதரில் சிறந்தவனே
புருஷவ்யாக்⁴ர = புருஷப் புலியே
தத்ர த்யாகே³ மே நிஸ்²சயம் ஸ்²ருணு = தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன் கேள்
ஹி த்யாக³: த்ரிவித⁴: ஸம்ப்ரகீர்தித: = தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது
பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே, தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்; கேள், தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.

यज्ञदानतपःकर्म न त्याज्यं कार्यमेव तत् ।
यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम् ॥१८- ५॥
யஜ்ஞதா³நதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் |
யஜ்ஞோ தா³நம் தபஸ்²சைவ பாவநாநி மநீஷிணாம் || 18- 5||
யஜ்ஞ தா³ந தப: கர்ம = வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை
ந த்யாஜ்யம் = விடக் கூடாது
தத் கார்யமேவ = செய்யவே வேண்டும்
யஜ்ஞ: தா³நம் ச தப ஏவ = வேள்வியும் தானமும், தவமும்
மநீஷிணாம் பாவநாநி = அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.
வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும். வேள்வியும் தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.

एतान्यपि तु कर्माणि सङ्गं त्यक्त्वा फलानि च ।
कर्तव्यानीति मे पार्थ निश्चितं मतमुत्तमम् ॥१८- ६॥
ஏதாந்யபி து கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா ப²லாநி ச |
கர்தவ்யாநீதி மே பார்த² நிஸ்²சிதம் மதமுத்தமம் || 18- 6||
து பார்த² = ஆனால் பார்த்தா
ஏதாநி கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா = இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும்
ப²லாநி ச = பயன்களை வேண்டாமலும்
கர்தவ்யாநி இதி = செய்ய வேண்டும் என்பது
மே உத்தமம் நிஸ்²சிதம் மதம் = என்னுடைய உத்தமமான நிச்சயக் கொள்கை.
ஆனால் பார்த்தா, இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும் என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.

नियतस्य तु संन्यासः कर्मणो नोपपद्यते ।
मोहात्तस्य परित्यागस्तामसः परिकीर्तितः ॥१८- ७॥
நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்³யதே |
மோஹாத்தஸ்ய பரித்யாக³ஸ்தாமஸ: பரிகீர்தித: || 18- 7||
து நியதஸ்ய கர்மண: = ஆனால் நியமத்தின் படியுள்ள செய்கையை
ஸந்ந்யாஸ: ந உபபத்³யதே = துறத்தல் தகாது
மோஹாத் தஸ்ய பரித்யாக³ = மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல்
தாமஸ: பரிகீர்தித: = தமோ குணத்தால் நேர்வதென்பர்
நியமத்தின் படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது. மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.

दुःखमित्येव यत्कर्म कायक्लेशभयात्त्यजेत् ।
स कृत्वा राजसं त्यागं नैव त्यागफलं लभेत् ॥१८- ८॥
து³:க²மித்யேவ யத்கர்ம காயக்லேஸ²ப⁴யாத்த்யஜேத் |
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாக³ம் நைவ த்யாக³ப²லம் லபே⁴த் || 18- 8||
யத் கர்ம = எது செய்ய வேண்டிய கருமமோ
து³:க²ம் ஏவ இதி = துன்பமாகக் கருதி
காய க்லேஸ² ப⁴யாத் = உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால்
த்யஜேத் = செய்யாமல் விடுவானேயானால்
ஸ: = அவன்
ராஜஸம் த்யாக³ம் க்ருத்வா = அவன் ராஜஸ தியாகம் செய்து
த்யாக³ ப²லம் ந லபே⁴த் ஏவ = தியாகப் பயனை அடையமாட்டான்
உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டு விடுவோன் புரியும் தியாகம் ரஜோ குணத்தின் பாற்பட்டது. அதனால் அவன் தியாகப் பயனை அடையமாட்டான்.

कार्यमित्येव यत्कर्म नियतं क्रियतेऽर्जुन ।
सङ्गं त्यक्त्वा फलं चैव स त्यागः सात्त्विको मतः ॥१८- ९॥
கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேऽர்ஜுந |
ஸங்க³ம் த்யக்த்வா ப²லம் சைவ ஸ த்யாக³: ஸாத்த்விகோ மத: || 18- 9||
அர்ஜுந நியதம் யத் கர்ம = அர்ஜுனா நியமத்துக் கிணங்கிய செய்கையை
கார்யம் இதி ஏவ = இது செய்தற்கு உரியது’ என்னும் எண்ணத்தால்
ஸங்க³ம் ப²லம் ச த்யக்த்வா = ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் விடுத்து
க்ரியதே = செய்தால்
ஸ: ஏவ ஸாத்த்விக த்யாக³: மத: = அதுவே சாத்விக தியாகம் எனப்படும்
நியமத்துக் கிணங்கிய செய்கையை, ‘இது செய்தற்கு உரியது’ என்னும் எண்ணத்தால் செய்து, அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.

न द्वेष्ट्यकुशलं कर्म कुशले नानुषज्जते ।
त्यागी सत्त्वसमाविष्टो मेधावी छिन्नसंशयः ॥१८- १०॥
ந த்³வேஷ்ட்யகுஸ²லம் கர்ம குஸ²லே நாநுஷஜ்ஜதே |
த்யாகீ³ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதா⁴வீ சி²ந்நஸம்ஸ²ய: || 18- 10||
ஸத்த்வஸமாவிஷ்ட: மேதா⁴வீ = சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய்
சி²ந்நஸம்ஸ²ய: த்யாகீ³ =ஐயங்களையறுத்த தியாகி
அகுஸ²லம் கர்ம = இன்பமற்ற செய்கையை
ந த்³வேஷ்டி = வெறுப்பதில்லை
குஸ²லே ந அநுஷஜ்ஜதே = இன்பமுடைய செய்கையில் பற்றுக் கொள்வதில்லை
சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், ஐயங்களையறுத்த தியாகி இன்பமற்ற செய்கையைப் பகைப்பதில்லை. இன்பமுடைய செய்கையில் நசை யுறுவதில்லை.

न हि देहभृता शक्यं त्यक्तुं कर्माण्यशेषतः ।
यस्तु कर्मफलत्यागी स त्यागीत्यभिधीयते ॥१८- ११॥
ந ஹி தே³ஹப்⁴ருதா ஸ²க்யம் த்யக்தும் கர்மாண்யஸே²ஷத: |
யஸ்து கர்மப²லத்யாகீ³ ஸ த்யாகீ³த்யபி⁴தீ⁴யதே || 18- 11||
ஹி தே³ஹப்⁴ருதா = மேலும் உடம்பெடுத்தவனால்
அஸே²ஷத: கர்மாணி = முழுதுமே செய்கைகளை
த்யக்தும் ந ஸ²க்யம் = விட்டுவிட முடியாது
ய கர்ம ப²லத்யாகீ³ = எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ
ஸ: து த்யாகீ³ இதி அபி⁴தீ⁴யதே = அவனே தியாகி யெனப்படுவான்
(மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.

अनिष्टमिष्टं मिश्रं च त्रिविधं कर्मणः फलम् ।
भवत्यत्यागिनां प्रेत्य न तु संन्यासिनां क्वचित् ॥१८- १२॥
அநிஷ்டமிஷ்டம் மிஸ்²ரம் ச த்ரிவித⁴ம் கர்மண: ப²லம் |
ப⁴வத்யத்யாகி³நாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம் க்வசித் || 18- 12||
அநிஷ்டம் இஷ்டம் மிஸ்²ரம் ச = வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என
த்ரிவித⁴ம் கர்மண: ப²லம் = மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்கள்
அத்யாகி³நாம் ப்ரேத்ய ப⁴வதி = தியாகிகளல்லாதோருக்கு இறந்த பின்னர் ஏற்படுகிறது
ஸந்ந்யாஸிநாம் து க்வசித் ந =சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை
வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்களைத் தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.

पञ्चैतानि महाबाहो कारणानि निबोध मे ।
सांख्ये कृतान्ते प्रोक्तानि सिद्धये सर्वकर्मणाम् ॥१८- १३॥
பஞ்சைதாநி மஹாபா³ஹோ காரணாநி நிபோ³த⁴ மே |
ஸாங்க்²யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்³த⁴யே ஸர்வகர்மணாம் || 18- 13||
மஹாபா³ஹோ = பெருந்தோளாய்
க்ருதாந்தே ஸாங்க்²யே = கர்மங்களின் முடிவிற்கான வழியை கூறும் சாங்கிய சாஸ்திரத்தில்
ஸர்வகர்மணாம் ஸித்³த⁴யே = எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்கு
ஏதாநி பஞ்சகாரணாநி ப்ரோக்தாநி = ஐந்தாகக் காரணங்கள் கூறப்பட்டன
மே நிபோ³த⁴ = (அவற்றை) என்னிடம் கேட்டுணர்
எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக் கூறப்பட்டன. அவற்றை என்னிடம் கேட்டுணர், பெருந்தோளாய்.

अधिष्ठानं तथा कर्ता करणं च पृथग्विधम् ।
विविधाश्च पृथक्चेष्टा दैवं चैवात्र पञ्चमम् ॥१८- १४॥
அதி⁴ஷ்டா²நம் ததா² கர்தா கரணம் ச ப்ருத²க்³வித⁴ம் |
விவிதா⁴ஸ்²ச ப்ருத²க்சேஷ்டா தை³வம் சைவாத்ர பஞ்சமம் || 18- 14||
அத்ர அதி⁴ஷ்டா²நம் ச = அவை இடமும்
கர்தா ச = செயலை செய்பவன்
ப்ருத²க்³வித⁴ம் கரணம் ச = பலவிதக் கரணங்கள்
விவிதா⁴: ப்ருத²க் சேஷ்டா ச = வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள்
தை³வம் ச பஞ்சமம் = இயற்கை என ஐந்து (காரணங்கள்)
அவை இடம், கர்த்தா, பலவிதக் கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், இயற்கை என ஐந்து.

शरीरवाङ्‌मनोभिर्यत्कर्म प्रारभते नरः ।
न्याय्यं वा विपरीतं वा पञ्चैते तस्य हेतवः ॥१८- १५॥
ஸ²ரீரவாங்‌மநோபி⁴ர்யத்கர்ம ப்ராரப⁴தே நர: |
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ: || 18- 15||
நர: ஸ²ரீர வாக் ‌மநோபி⁴: = மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும்
யத் கர்ம ப்ராரப⁴தே = எந்தச் செயலைத் தொடங்கினாலும்
ந்யாய்யம் வா விபரீதம் வா = அது நியாயமாயினும் விபரீதமாயினும்
தஸ்ய ஏதே பஞ்ச ஹேதவ: = அதற்கு இந்த ஐந்துமே காரணங்கள்
மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும், அது நியாயமாயினும் விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.

तत्रैवं सति कर्तारमात्मानं केवलं तु यः ।
पश्यत्यकृतबुद्धित्वान्न स पश्यति दुर्मतिः ॥१८- १६॥
தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய: |
பஸ்²யத்யக்ருதபு³த்³தி⁴த்வாந்ந ஸ பஸ்²யதி து³ர்மதி: || 18- 16||
து ஏவம் ஸதி = இங்ஙனமிருக்கையில்
ய: அக்ருதபு³த்³தி⁴த்வாத் = எவன் புத்திக் குறைவால் ஆத்மாவை
தத்ர கேவலம் ஆத்மாநம் = அங்கே (கர்மங்களைச் செய்வதில்) தனிப்பொருளாகிய ஆத்மாவை
கர்தாரம் பஸ்²யதி = கர்த்தாவாக (தொழில் செய்பவனாக) காணுகிறானோ
ஸ து³ர்மதி: ந பஸ்²யதி = அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்
இங்ஙனமிருக்கையில், தனிப்பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன் புத்திக் குறைவால் காணுகிறானோ அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.

यस्य नाहंकृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते ।
हत्वापि स इमाँल्लोकान्न हन्ति न निबध्यते ॥१८- १७॥
யஸ்ய நாஹங்க்ருதோ பா⁴வோ பு³த்³தி⁴ர்யஸ்ய ந லிப்யதே |
ஹத்வாபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிப³த்⁴யதே || 18- 17||
யஸ்ய அஹங்க்ருதோ பா⁴வ ந = எவருடைய (உள்ளத்தில்) நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லையோ
யஸ்ய பு³த்³தி⁴ ந லிப்யதே = பற்றுதல்கள் அற்று மதியுடையவன்
ஸ: இமாந் லோகாந் = அவன் இந்த உலகங்கள் அனைத்தையும்
ஹத்வா அபி ந ஹந்தி ந நிப³த்⁴யதே = கொன்ற போதிலும் கொலையாளி யாகான்; பாவத்தில் கட்டுப்பட மாட்டான்
‘நான்’ எனுங் கொள்கை தீர்ந்தான், பற்றுதல்கள் அற்று மதியுடையான், அவன் இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளி யாகான், கட்டுப்பட மாட்டான்.

ज्ञानं ज्ञेयं परिज्ञाता त्रिविधा कर्मचोदना ।
करणं कर्म कर्तेति त्रिविधः कर्मसंग्रहः ॥१८- १८॥
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா⁴ கர்மசோத³நா |
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித⁴: கர்மஸங்க்³ரஹ: || 18- 18||
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா = அறிவு, அறியப்படுபொருள், அறிவோன்
த்ரிவிதா⁴ கர்மசோத³நா = இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன
கர்தா கரணம் கர்ம இதி த்ரிவித⁴: = கர்த்தா, கருவி, செய்கை என்று மூன்று விதங்களும்
கர்மஸங்க்³ரஹ: = கர்மத்தின் அமைப்பு ஆகும்
அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன. கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் அமைப்பு மூன்று பகுதிப்பட்டது.

ज्ञानं कर्म च कर्ता च त्रिधैव गुणभेदतः ।
प्रोच्यते गुणसंख्याने यथावच्छृणु तान्यपि ॥१८- १९॥
ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதை⁴வ கு³ணபே⁴த³த: |
ப்ரோச்யதே கு³ணஸங்க்²யாநே யதா²வச்ச்²ருணு தாந்யபி || 18- 19||
கு³ணஸங்க்²யாநே = குணங்களை யெண்ணுமிடத்தே
ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச = ஞானம், கர்மம், கர்த்தா
கு³ணபே⁴த³த: = இவை குண பேதங்களால்
த்ரிதா⁴ ஏவ = மும்மூன்று வகைப்படும் என்று
ப்ரோச்யதே = சொல்லப் படுகின்றன
தாநி அபி யதா²வத் ச்²ருணு = அவற்றையும் உள்ளபடி கேள்
குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா இவை பேதங்களால் மும்மூன்று வகைப்படும். அவற்றையும் உள்ளபடி கேள்.

सर्वभूतेषु येनैकं भावमव्ययमीक्षते ।
अविभक्तं विभक्तेषु तज्ज्ञानं विद्धि सात्त्विकम् ॥१८- २०॥
ஸர்வபூ⁴தேஷு யேநைகம் பா⁴வமவ்யயமீக்ஷதே |
அவிப⁴க்தம் விப⁴க்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்³தி⁴ ஸாத்த்விகம் || 18- 20||
ஏந விப⁴க்தேஷு = எந்த ஞானத்தினால் தனித்தனியான
ஸர்வபூ⁴தேஷு = உயிர்கள் அனைத்திலும்
அவிப⁴க்தம் அவ்யயம் ஏகம் பா⁴வம் = பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பை
ஈக்ஷதே = காணுகிறானோ
தத் ஜ்ஞாநம் ஸாத்த்விகம் வித்³தி⁴ = அந்த ஞானத்தை சாத்வீகமென்றறி
பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பைக் காணும் ஞானம் சாத்வீகமென்றறி.

पृथक्त्वेन तु यज्ज्ञानं नानाभावान्पृथग्विधान् ।
वेत्ति सर्वेषु भूतेषु तज्ज्ञानं विद्धि राजसम् ॥१८- २१॥
ப்ருத²க்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபா⁴வாந்ப்ருத²க்³விதா⁴ந் |
வேத்தி ஸர்வேஷு பூ⁴தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்³தி⁴ ராஜஸம் || 18- 21||
து யத் ஜ்ஞாநம் = ஆனால் எந்த ஞானத்தின் மூலமாக
ஸர்வேஷு பூ⁴தேஷு = உயிர்களனைத்திலும்
ப்ருத²க்³விதா⁴ந் நாநாபா⁴வாந் = வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள்
ப்ருத²க்த்வேந வேத்தி = பிரித்துக் காணும்
தத் ஜ்ஞாநம் ராஜஸம் வித்³தி⁴ = அந்த ஞானம் ராஜசம் என்றுணர்
உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜசமென்றுணர்.

यत्तु कृत्स्नवदेकस्मिन्कार्ये सक्तमहैतुकम् ।
अतत्त्वार्थवदल्पं च तत्तामसमुदाहृतम् ॥१८- २२॥
யத்து க்ருத்ஸ்நவதே³கஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம் |
அதத்த்வார்த²வத³ல்பம் ச தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 18- 22||
து யத் ஏகஸ்மிந் கார்யே = ஆனால் எந்த ஞானம் யாதேனும் ஒற்றைக் காரியத்தை
க்ருத்ஸ்நவத் ஸக்தம் = அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும்
தத் அஹைதுகம் = யுக்திக்கு பொருந்தாததும்
அதத்த்வார்த²வத் = உண்மையில் அறியாததும்
அல்பம் ச = அற்பத் தன்மை உடையதும்
தாமஸம் உதா³ஹ்ருதம் = தாமசமென்று கூறப்படும்
காரணங் கருதாமல், யாதேனும் ஒற்றைக் காரியத்தை அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும், உண்மையிலறியாததும், அற்பத் தன்மையுடையதும் ஆகிய ஞானம் தாமசமென்று கூறப்படும்.

नियतं सङ्गरहितमरागद्वेषतः कृतम् ।
अफलप्रेप्सुना कर्म यत्तत्सात्त्विकमुच्यते ॥१८- २३॥
நியதம் ஸங்க³ரஹிதமராக³த்³வேஷத: க்ருதம் |
அப²லப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே || 18- 23||
யத் கர்ம = எந்த செய்கை
நியதம் ஸங்க³ரஹிதம் = விதிப்படி பற்றுதல் இன்றி
அப²லப்ரேப்ஸுநா = பயனைக் கருதாமல்
அராக³த்³வேஷத: = விருப்பு வெறுப்பின்றி
க்ருதம் = செய்யப் படுகிறதோ
தத் ஸாத்த்விகம் உச்யதே = அது சாத்விக மெனப்படும்
பயன்களை வேண்டாதா னொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை, சாத்விக மெனப்படும்.

यत्तु कामेप्सुना कर्म साहंकारेण वा पुनः ।
क्रियते बहुलायासं तद्राजसमुदाहृतम् ॥१८- २४॥
யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந: |
க்ரியதே ப³ஹுலாயாஸம் தத்³ராஜஸமுதா³ஹ்ருதம் || 18- 24||
து யத் கர்ம = ஆனால் எந்த செயல்
புந: காமேப்ஸுநா = விருப்பங்களுக்கு வசப்பட்டவனால்
வா ஸாஹங்காரேண = அல்லது அகங்காரமுடையவனால்
ப³ஹுலாயாஸம் = செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை
தத்³ ராஜஸம் உதா³ஹ்ருதம் = அது ராஜசம் எனப்படும்
விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை ராஜசமெனப்படும்.

अनुबन्धं क्षयं हिंसामनवेक्ष्य च पौरुषम् ।
मोहादारभ्यते कर्म यत्तत्तामसमुच्यते ॥१८- २५॥
அநுப³ந்த⁴ம் க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம் |
மோஹாதா³ரப்⁴யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே || 18- 25||
யத் கர்ம அநுப³ந்த⁴ம் = எந்தச் செய்கையின் பின்விளைவையும்
க்ஷயம் = அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும்
ஹிம்ஸாம் = துன்பத்தையும்
பௌருஷம் ச = செய்வானது திறமையையும்
அநவேக்ஷ்ய = கருதாமல்
மோஹாத் ஆரப்⁴யதே = அறிவின்மையால் தொடங்கப்படுகிறதோ
தத் தாமஸம் உச்யதே =தாமச மெனப்படும்
செய்கையின் பின்விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும், துன்பத்தையும், செய்வானது திறமையையும், கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படுங் கர்மம் தாமச மெனப்படும்.

मुक्तसङ्गोऽनहंवादी धृत्युत्साहसमन्वितः ।
सिद्ध्यसिद्ध्योर्निर्विकारः कर्ता सात्त्विक उच्यते ॥१८- २६॥
முக்தஸங்கோ³ऽநஹம்வாதீ³ த்⁴ருத்யுத்ஸாஹஸமந்வித: |
ஸித்³த்⁴யஸித்³த்⁴யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே || 18- 26||
முக்தஸங்கோ³ = பற்றற்றவனாகவும்
அநஹம்வாதீ³ = நான் என்னும் எண்ணம் இல்லாதவனாகவும்
த்⁴ருத்யுத்ஸாஹஸமந்வித: = உறுதியும், ஊக்கமும் உடையவனாகவும்
ஸித்³தி⁴ அஸித்³த்⁴யோ நிர்விகார: = வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவனாகவும்
கர்தா ஸாத்த்விக உச்யதே = உள்ள கர்த்தாவை (செயல் ஆற்றுபவனை) சாத்வீகன் (ஒளியியல்பு) உடையவன் என்பர்.
நசைக ளற்றான், நானென்ப தற்றான்,
உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான்,
வெற்றி தோல்வியில் வேறுபா டற்றான்-
இங்ஙன மாகித் தொழில்க ளியற்றுவோன்
ஒளியியல் புடையா னென்ப.

रागी कर्मफलप्रेप्सुर्लुब्धो हिंसात्मकोऽशुचिः ।
हर्षशोकान्वितः कर्ता राजसः परिकीर्तितः ॥१८- २७॥
ராகீ³ கர்மப²லப்ரேப்ஸுர்லுப்³தோ⁴ ஹிம்ஸாத்மகோऽஸு²சி: |
ஹர்ஷஸோ²காந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித: || 18- 27||
ராகீ³ = வேட்கையுடையோன்
கர்மப²லப்ரேப்ஸு = செய்கைப் பயன்களை விரும்புவோன்
லுப்³த⁴: = லோபி (பேராசை உள்ளவன்)
ஹிம்ஸாத்மக: = இடர் செய்வோன்
அஸு²சி: = தூய்மை யற்றோன்
ஹர்ஷஸோ²காந்வித: = இன்பதுன்பத்தால் பாதிக்கப் படுபவன்
கர்தா ராஜஸ: பரிகீர்தித: = இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்
வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன், தூய்மை யற்றோன், களிக்குந் துயிலுக்கும் வசப்பட்டோன் – இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.

अयुक्तः प्राकृतः स्तब्धः शठो नैष्कृतिकोऽलसः ।
विषादी दीर्घसूत्री च कर्ता तामस उच्यते ॥१८- २८॥
அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்³த⁴: ஸ²டோ² நைஷ்க்ருதிகோऽலஸ: |
விஷாதீ³ தீ³ர்க⁴ஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே || 18- 28||
அயுக்த: = கட்டுப் படுத்தாத மன நிலை உடையவன்
ப்ராக்ருத: = அறிவு முதிர்ச்சி அடையாதவன்
ஸ்தப்³த⁴: = கர்வமுடையவன்
ஸ²ட²: = வஞ்சகம் உடையவன்
நைஷ்க்ருதிக: = பிறருடைய வாழ்க்கையை கெடுப்பவன்
விஷாதீ³ = கவலை கொண்டவன்
அலஸ: = சோம்பேறியும்
தீ³ர்க⁴ஸூத்ரீ ச = காலத்தை நீடித்துக்கொண்டே போவோன்
கர்தா தாமஸ உச்யதே = இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்
யோக நிலை பெறாதோன், அநாகரிகன், முரடன், வஞ்சகன், பொறாமையுடையோன், சோம்பேறி, ஏக்கம் பிடித்தவன், காலத்தை நீடித்துக்கொண்டே போவோன், இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்.

बुद्धेर्भेदं धृतेश्चैव गुणतस्त्रिविधं शृणु ।
प्रोच्यमानमशेषेण पृथक्त्वेन धनंजय ॥१८- २९॥
பு³த்³தே⁴ர்பே⁴த³ம் த்⁴ருதேஸ்²சைவ கு³ணதஸ்த்ரிவித⁴ம் ஸ்²ருணு |
ப்ரோச்யமாநமஸே²ஷேண ப்ருத²க்த்வேந த⁴நஞ்ஜய || 18- 29||
த⁴நஞ்ஜய = தனஞ்ஜயா
கு³ணத: ஏவ = குண வகையால்
பு³த்³தே⁴: த்⁴ருதே: ச = புத்திக்கும் மன உறுதிக்கும்
த்ரிவித⁴ம் பே⁴த³ம் = மூன்று விதமான வேறுபாட்டை
அஸே²ஷேண ப்ருத²க்த்வேந = முழுமையாகவும் பகுத்தும்
ப்ரோச்யமாநம் ஸ்²ருணு = உரைக்கிறேன், கேள்
குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன்; தனஞ்ஜயா, கேள்.

प्रवृत्तिं च निवृत्तिं च कार्याकार्ये भयाभये ।
बन्धं मोक्षं च या वेत्ति बुद्धिः सा पार्थ सात्त्विकी ॥१८- ३०॥
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே ப⁴யாப⁴யே |
ப³ந்த⁴ம் மோக்ஷம் ச யா வேத்தி பு³த்³தி⁴: ஸா பார்த² ஸாத்த்விகீ || 18- 30||
பார்த² = அர்ஜுனா
யா ப்ரவ்ருத்திம் நிவ்ருத்திம் ச = எது ப்ரவ்ருத்தி மார்க்கம், எது நிவ்ருத்தி மார்க்கம்
கார்யாகார்யே ப⁴யாப⁴யே ச = செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது
ப³ந்த⁴ம் மோக்ஷம் ச வேத்தி = பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும்
ஸா பு³த்³தி⁴: ஸாத்த்விகீ = அந்த புத்தியே சாத்விக புத்தியாம்
தொழிலெது, ஒழிவு யாது, செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும் புத்தியே, பார்த்தா, சாத்விக புத்தியாம்.

यया धर्ममधर्मं च कार्यं चाकार्यमेव च ।
अयथावत्प्रजानाति बुद्धिः सा पार्थ राजसी ॥१८- ३१॥
யயா த⁴ர்மமத⁴ர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச |
அயதா²வத்ப்ரஜாநாதி பு³த்³தி⁴: ஸா பார்த² ராஜஸீ || 18- 31||
பார்த² = பார்த்தா.
யயா த⁴ர்மம் அத⁴ர்மம் ச = எந்த புத்தியினால் தர்மத்தையும் அதர்மத்தையும்
கார்யம் அகார்யம் ஏவ ச = செய்யத் தக்கது, தகாதது
அயதா²வத் ப்ரஜாநாதி = உள்ளபடி அறியாத
ஸா பு³த்³தி⁴: ராஜஸீ = புத்தி ராஜச மெனப்படும்
தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா.

अधर्मं धर्ममिति या मन्यते तमसावृता ।
सर्वार्थान्विपरीतांश्च बुद्धिः सा पार्थ तामसी ॥१८- ३२॥
அத⁴ர்மம் த⁴ர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா |
ஸர்வார்தா²ந்விபரீதாம்ஸ்²ச பு³த்³தி⁴: ஸா பார்த² தாமஸீ || 18- 32||
பார்த² = பார்த்தா
யா தமஸா ஆவ்ருதா = எந்த புத்தி இருளால் கவரப்பட்டதாய்
அத⁴ர்மம் த⁴ர்மம் இதி ச = அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும்
ஸர்வார்தா²ந் விபரீதாந் ச = எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாக
மந்யதே = நினைக்கிறதோ
ஸா பு³த்³தி⁴: தாமஸீ = அது புத்தி தாமச புத்தியாம்
பார்த்தா, இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.

धृत्या यया धारयते मनःप्राणेन्द्रियक्रियाः ।
योगेनाव्यभिचारिण्या धृतिः सा पार्थ सात्त्विकी ॥१८- ३३॥
த்⁴ருத்யா யயா தா⁴ரயதே மந:ப்ராணேந்த்³ரியக்ரியா: |
யோகே³நாவ்யபி⁴சாரிண்யா த்⁴ருதி: ஸா பார்த² ஸாத்த்விகீ || 18- 33||
பார்த² = பார்த்தா
யயா அவ்யபி⁴சாரிண்யா த்⁴ருத்யா: = எந்த பிறழ்ச்சி இல்லாத உறுதியால்
யோகே³ந = யோகத்தின் மூலம்
மந: ப்ராண இந்த்³ரியக்ரியா: = மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களை
தா⁴ரயதே = நிலை நிறுத்துகிறானோ
ஸா த்⁴ருதி: ஸாத்த்விகீ = அந்த உறுதியே சாத்வீகமாவது
மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன் தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்வீகமாவது, பார்த்தா.

यया तु धर्मकामार्थान्धृत्या धारयतेऽर्जुन ।
प्रसङ्गेन फलाकाङ्क्षी धृतिः सा पार्थ राजसी ॥१८- ३४॥
யயா து த⁴ர்மகாமார்தா²ந்த்⁴ருத்யா தா⁴ரயதேऽர்ஜுந |
ப்ரஸங்கே³ந ப²லாகாங்க்ஷீ த்⁴ருதி: ஸா பார்த² ராஜஸீ || 18- 34||
து பார்த² = ஆனால் பார்த்தா
அர்ஜுந = அர்ஜுனா
ப²லாகாங்க்ஷீ = பயன்களை விரும்புவோன்
யயா த்⁴ருத்யா = எந்த உறுதியினால்
ப்ரஸங்கே³ந = மிகுந்த பற்றோடு
த⁴ர்மகாமார்தா²ந் தா⁴ரயதே = அறம் பொருளின்பங்களை அடைவதிலே உறுதியாக இருக்கிறானோ
ஸா த்⁴ருதி: ராஜஸீ = அந்த உறுதி ராஜசம் ஆகும்
பார்த்தா, பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங்களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாகும்.

यया स्वप्नं भयं शोकं विषादं मदमेव च ।
न विमुञ्चति दुर्मेधा धृतिः सा पार्थ तामसी ॥१८- ३५॥
யயா ஸ்வப்நம் ப⁴யம் ஸோ²கம் விஷாத³ம் மத³மேவ ச |
ந விமுஞ்சதி து³ர்மேதா⁴ த்⁴ருதி: ஸா பார்த² தாமஸீ || 18- 35||
யயா = எந்த (மன உறுதியினால்)
ஸ்வப்நம் ப⁴யம் ஸோ²கம் = உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும்
விஷாத³ம் = ஏக்கத்தையும்
மத³ம் = செருக்கையும்
ந விமுஞ்சதி = விடமுடியவில்லையோ
பார்த² த்⁴ருதி: ஸா தாமஸீ = பார்த்தா, அந்த உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது
பார்த்தா, உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும் ஏக்கத்தையும், மதத்தையும் மாற்றத் திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.

सुखं त्विदानीं त्रिविधं शृणु मे भरतर्षभ ।
अभ्यासाद्रमते यत्र दुःखान्तं च निगच्छति ॥१८- ३६॥
ஸுக²ம் த்விதா³நீம் த்ரிவித⁴ம் ஸ்²ருணு மே ப⁴ரதர்ஷப⁴ |
அப்⁴யாஸாத்³ரமதே யத்ர து³:கா²ந்தம் ச நிக³ச்ச²தி || 18- 36||
ப⁴ரதர்ஷப⁴ = பாரதக் காளையே!
இதா³நீம் த்ரிவித⁴ம் ஸுக²ம் = இப்போது மூன்று விதமாகிய இன்பங்களை
மே ஸ்²ருணு = என்னிடமிருந்து கேள்
யத்ர அப்⁴யாஸாத் ரமதே = எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ
து³:கா²ந்தம் ச நிக³ச்ச²தி = எதனில் துக்க நாச மெய்துவானோ
பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள். எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க நாச மெய்துவானோ,

यत्तदग्रे विषमिव परिणामेऽमृतोपमम् ।
तत्सुखं सात्त्विकं प्रोक्तमात्मबुद्धिप्रसादजम् ॥१८- ३७॥
யத்தத³க்³ரே விஷமிவ பரிணாமேऽம்ருதோபமம் |
தத்ஸுக²ம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபு³த்³தி⁴ப்ரஸாத³ஜம் || 18- 37||
யத் அக்³ரே விஷம் இவ = எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததாய்
தத் பரிணாமே அம்ருதோபமம் = அது விளைவில் அமிர்தத்துக்கு ஒப்பாக மாறுகிறதோ
தத் ஸுக²ம் ஸாத்த்விகம் ப்ரோக்தம் = அந்த இன்பமே சாத்விகம் எனக் கூறப் படுகிறது
தத் ஆத்ம பு³த்³தி⁴ ப்ரஸாத³ஜம் = அது தன் (பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த) அறிவில் பிறப்பது
எது தொடக்கத்தில் விஷத்தை யொத்ததாய், விளைவில் அமிர்தமொப்ப மாறுவதோ, அந்த இன்பமே சாத்விகமாகும்; அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.

विषयेन्द्रियसंयोगाद्यत्तदग्रेऽमृतोपमम् ।
परिणामे विषमिव तत्सुखं राजसं स्मृतम् ॥१८- ३८॥
விஷயேந்த்³ரிய ஸம்யோகா³த்³ யத் தத³க்³ரேऽம்ருதோபமம் |
பரிணாமே விஷமிவ தத்ஸுக²ம் ராஜஸம் ஸ்ம்ருதம் || 18- 38||
யத் விஷயேந்த்³ரிய ஸம்யோகா³த் = எது விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால்
அக்³ரே அம்ருதோபமம் = தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து
பரிணாமே விஷமிவ = விளைவில் நஞ்சு போன்றதாய் முடியுமோ
தத்ஸுக²ம் ராஜஸம் ஸ்ம்ருதம் = அந்த இன்பம் ராஜசம் எனப்படும்
விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசமெனப்படும்.

यदग्रे चानुबन्धे च सुखं मोहनमात्मनः ।
निद्रालस्यप्रमादोत्थं तत्तामसमुदाहृतम् ॥१८- ३९॥
யத³க்³ரே சாநுப³ந்தே⁴ ச ஸுக²ம் மோஹநமாத்மந: |
நித்³ராலஸ்யப்ரமாதோ³த்த²ம் தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 18- 39||
யத் ஸுக²ம் அக்³ரே ச அநுப³ந்தே⁴ ச = எந்த சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும்
ஆத்மந: மோஹநம் = ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய்
நித்³ரா ஆலஸ்ய ப்ரமாத³: உத்த²ம் = உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும்
தத் தாமஸம் உதா³ஹ்ருதம் = அது தாமசமென்று கருதப்படும்
தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.

न तदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुनः ।
सत्त्वं प्रकृतिजैर्मुक्तं यदेभिः स्यात्त्रिभिर्गुणैः ॥१८- ४०॥
ந தத³ஸ்தி ப்ருதி²வ்யாம் வா தி³வி தே³வேஷு வா புந: |
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதே³பி⁴: ஸ்யாத்த்ரிபி⁴ர்கு³ணை: || 18- 40||
ப்ரக்ருதிஜை: = இயற்கையில் தோன்றும்
ஏபி⁴: த்ரிபி⁴: கு³ணை: = இம்மூன்று குணங்களினின்றும்
முக்தம் = விடுபட்ட
யத் ஸத்த்வம் ஸ்யாத் = எந்த உயிர் இருக்குமோ
தத் ப்ருதி²வ்யாம் வா = அது மண்ணுலகத்திலோ
தி³வி தே³வேஷு வா = வானுலகத்தில் தேவருள்ளேயொ
புந: ந அஸ்தி = வேறு இடங்களிலோ இல்லை.
இயற்கையில் தோன்றும் இம்மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலகத்தில் தேவருள்ளேயுமில்லை.
ब्राह्मणक्षत्रियविशां शूद्राणां च परन्तप ।
कर्माणि प्रविभक्तानि स्वभावप्रभवैर्गुणैः ॥१८- ४१॥
ப்³ராஹ்மணக்ஷத்ரியவிஸா²ம் ஸூ²த்³ராணாம் ச பரந்தப |
கர்மாணி ப்ரவிப⁴க்தாநி ஸ்வபா⁴வப்ரப⁴வைர்கு³ணை: || 18- 41||
பரந்தப = எதிரிகளை வாட்டுபவனே
ப்³ராஹ்மண க்ஷத்ரியவிஸா²ம் ஸூ²த்³ராணாம் ச = பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய
கர்மாணி = தொழில்கள்
ஸ்வபா⁴வப்ரப⁴வை: கு³ணை: = அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி
ப்ரவிப⁴க்தாநி = வகுப்புற்றனவாம்
பரந்தபா! பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்.

शमो दमस्तपः शौचं क्षान्तिरार्जवमेव च ।
ज्ञानं विज्ञानमास्तिक्यं ब्रह्मकर्म स्वभावजम् ॥१८- ४२॥
ஸ²மோ த³மஸ்தப: ஸௌ²சம் க்ஷாந்திரார்ஜவமேவ ச |
ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்³ரஹ்மகர்ம ஸ்வபா⁴வஜம் || 18- 42||
ஸ²மோ த³ம: தப: = மன அடக்கமும், புலனடக்கமும், தவமும்
ஸௌ²சம் = தூய்மை,
க்ஷாந்தி = பொறுமை,
ஆர்ஜவம் = நேர்மை
ஆஸ்திக்யம் = ஆத்திகம்
ஜ்ஞாநம் விஜ்ஞாநம் ஏவ = ஞானம், அனுபவம் மூலம் உணர்தலும்
ஸ்வபா⁴வஜம் ப்³ரஹ்ம கர்ம = இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்
அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.

शौर्यं तेजो धृतिर्दाक्ष्यं युद्धे चाप्यपलायनम् ।
दानमीश्वरभावश्च क्षात्रं कर्म स्वभावजम् ॥१८- ४३॥
ஸௌ²ர்யம் தேஜோ த்⁴ருதிர்தா³க்ஷ்யம் யுத்³தே⁴ சாப்யபலாயநம் |
தா³நமீஸ்²வரபா⁴வஸ்²ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபா⁴வஜம் || 18- 43||
ஸௌ²ர்யம் = சூரத் தன்மை,
தேஜ: = ஒளி,
த்⁴ருதி: = உறுதி,
தா³க்ஷ்யம் ச = திறமை,
யுத்³தே⁴ அபி அபலாயநம் = போரில் புறங்காட்டாமை,
தா³நம் ஈஸ்²வரபா⁴வ: ச = ஈகை, இறைமை (ஆளும் தன்மை)
ஸ்வபா⁴வஜம் க்ஷாத்ரம் கர்ம = இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்
சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, இறைமை – இவை இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.

कृषिगौरक्ष्यवाणिज्यं वैश्यकर्म स्वभावजम् ।
परिचर्यात्मकं कर्म शूद्रस्यापि स्वभावजम् ॥१८- ४४॥
க்ருஷிகௌ³ரக்ஷ்யவாணிஜ்யம் வைஸ்²யகர்ம ஸ்வபா⁴வஜம் |
பரிசர்யாத்மகம் கர்ம ஸூ²த்³ரஸ்யாபி ஸ்வபா⁴வஜம் || 18- 44||
க்ருஷி கௌ³ரக்ஷ்ய வாணிஜ்யம் = உழவு, பசுக்காத்தல், வணிகம்
வைஸ்²யகர்ம ஸ்வபா⁴வஜம் = இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம்
பரிசர்யாத்மகம் கர்ம = மக்கள் அனைவருக்கும் தொண்டு புரிதல்
ஸூ²த்³ரஸ்ய அபி = சூத்திரனுக்கு
ஸ்வபா⁴வஜம் = அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்
உழவு, பசுக்காத்தல், வணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.

स्वे स्वे कर्मण्यभिरतः संसिद्धिं लभते नरः ।
स्वकर्मनिरतः सिद्धिं यथा विन्दति तच्छृणु ॥१८- ४५॥
ஸ்வே ஸ்வே கர்மண்யபி⁴ரத: ஸம்ஸித்³தி⁴ம் லப⁴தே நர: |
ஸ்வகர்மநிரத: ஸித்³தி⁴ம் யதா² விந்த³தி தச்ச்²ருணு || 18- 45||
ஸ்வே ஸ்வே கர்மணி = தனக்குத் தானே உரிய கர்மத்தில்
அபி⁴ரத: நர: = மகிழ்ச்சியுறும் மனிதன்
ஸம்ஸித்³தி⁴ம் லப⁴தே = ஈடேற்றம் பெறுகிறான்
ஸ்வகர்மநிரத: = தனக்குரிய தொழிலில் இன்புறுவோன்
யதா² ஸித்³தி⁴ம் விந்த³தி = எங்ஙனம் சித்தியடைகிறான் என்று
தத் ஸ்²ருணு = அதைக் கேள்
தனக்குத் தானே உரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரிய தொழிலில் இன்புறுவோன் எங்ஙனம் சித்தியடைகிறானென்பது சொல்லுகிறேன் கேள்.

यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम् ।
स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः ॥१८- ४६॥
யத: ப்ரவ்ருத்திர்பூ⁴தாநாம் யேந ஸர்வமித³ம் ததம் |
ஸ்வகர்மணா தமப்⁴யர்ச்ய ஸித்³தி⁴ம் விந்த³தி மாநவ: || 18- 46||
யத: பூ⁴தாநாம் ப்ரவ்ருத்தி = எதிலிருந்து உயிர்கள் உண்டாயினவோ
யேந இத³ம் ஸர்வம் ததம் = எதனால் அனைத்தும் வியாபிக்கப் பட்டிருக்கிறதோ
தம் = அந்த பரமாத்மாவை
ஸ்வகர்மணா அப்⁴யர்ச்ய = தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும்
மாநவ: விந்த³தி = மனிதன் ஈடேறுகிறான்
உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.

श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात् ।
स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् ॥१८- ४७॥
ஸ்²ரேயாந்ஸ்வத⁴ர்மோ விகு³ண: பரத⁴ர்மாத்ஸ்வநுஷ்டி²தாத் |
ஸ்வபா⁴வநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பி³ஷம் || 18- 47||
ஸ்வநுஷ்டி²தாத் பரத⁴ர்மாத் = பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும்
விகு³ண: ஸ்வத⁴ர்ம: ஸ்²ரேயாந் = தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று
ஸ்வபா⁴வ நியதம் குர்வந் = இயற்கையி லேற்பட்ட தொழிலை
கில்பி³ஷம் ந ஆப்நோதி = பாவமடைய மாட்டான்
பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று. இயற்கையி லேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய மாட்டான்.

सहजं कर्म कौन्तेय सदोषमपि न त्यजेत् ।
सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृताः ॥१८- ४८॥
ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோ³ஷமபி ந த்யஜேத் |
ஸர்வாரம்பா⁴ ஹி தோ³ஷேண தூ⁴மேநாக்³நிரிவாவ்ருதா: || 18- 48||
கௌந்தேய = குந்தி மகனே
ஸஹஜம் கர்ம ஸதோ³ஷம் அபி = இயல்பான தொழில் குறையுடையதாயினும்
ந த்யஜேத் = கைவிடலாகாது
ஹி தூ⁴மேந அக்³நி: இவ = ஏனெனில் புகையால் சூழப் பட்ட தீ போல
ஸர்வாரம்பா⁴ = எல்லா தொழில்களிலும்
தோ³ஷேண ஆவ்ருதா: = சூழ்ந்தே நிற்கின்றன
குந்தி மகனே, இயல்பான தொழில் குறையுடையதாயினும், அதை கைவிடலாகாது. எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.

असक्तबुद्धिः सर्वत्र जितात्मा विगतस्पृहः ।
नैष्कर्म्यसिद्धिं परमां संन्यासेनाधिगच्छति ॥१८- ४९॥
அஸக்தபு³த்³தி⁴: ஸர்வத்ர ஜிதாத்மா விக³தஸ்ப்ருஹ: |
நைஷ்கர்ம்யஸித்³தி⁴ம் பரமாம் ஸந்ந்யாஸேநாதி⁴க³ச்ச²தி || 18- 49||
அஸக்தபு³த்³தி⁴: = பற்றற்ற மதியுடன்
விக³தஸ்ப்ருஹ: ஸந்ந்யாஸேந = விருப்பம் தவிர்த்தவனாக
ஜிதாத்மா = தன்னை வென்றவன்
ஸர்வத்ர = எங்கும்
பரமாம் நைஷ்கர்ம்யஸித்³தி⁴ம் = செயல் இல்லாத பெரிதும் உயர்ந்த வெற்றியை (கர்மத்தளையிலிருந்து விடுபடும் வெற்றி)
அதி⁴க³ச்ச²தி = அடைகிறான்.
யாங்கணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்ந்து, பின்னர் செயலிலாப் பெரிதுயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான்.

सिद्धिं प्राप्तो यथा ब्रह्म तथाप्नोति निबोध मे ।
समासेनैव कौन्तेय निष्ठा ज्ञानस्य या परा ॥१८- ५०॥
ஸித்³தி⁴ம் ப்ராப்தோ யதா² ப்³ரஹ்ம ததா²ப்நோதி நிபோ³த⁴ மே |
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா² ஜ்ஞாநஸ்ய யா பரா || 18- 50||
ஜ்ஞாநஸ்ய பரா நிஷ்டா² = ஞானத்தினுடைய உயர்ந்த நிலை
யா = எதுவோ
ஸித்³தி⁴ம் ப்ராப்த: = (அந்த) நிலையை அடைந்த மனிதன்
யதா² ப்³ரஹ்ம ஆப்நோதி = எங்ஙனம் பிரம்மத்தை அடைகிறானோ
ததா² = அந்த நிலையை
ஸமாஸேந ஏவ = சுருக்கமாக
மே நிபோ³த⁴ = என்னிடமிருந்து தெரிந்து கொள்
கௌந்தேய = குந்தி மைந்தனே!
சித்தியடைந்தவன் எங்ஙனம் பிரம்மத்தில் கலப்பதாகிய மிகச் சிறந்த ஞான நிலை யெய்துவா னென்பதைக் கூறுகிறேன், கேள்.

बुद्ध्या विशुद्ध्या युक्तो धृत्यात्मानं नियम्य च ।
शब्दादीन्विषयांस्त्यक्त्वा रागद्वेषौ व्युदस्य च ॥१८- ५१॥
பு³த்³த்⁴யா விஸு²த்³த்⁴யா யுக்தோ த்⁴ருத்யாத்மாநம் நியம்ய ச |
ஸ²ப்³தா³தீ³ந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராக³த்³வேஷௌ வ்யுத³ஸ்ய ச || 18- 51||
விஸு²த்³த்⁴யா பு³த்³த்⁴யா யுக்த: = தூய்மை பெற்ற புத்தியுடையோனாய்
த்⁴ருத்யா ஆத்மாநம் நியம்ய ச = உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி
ஸ²ப்³தா³தீ³ந் விஷயாந் த்யக்த்வா = ஒலி முதலிய புலன் நுகர் பொருட்களை துறந்து
ராக³ த்³வேஷௌ வ்யுத³ஸ்ய ச = விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு
தூய்மை பெற்ற புத்தியுடையோனாய், உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய விஷயங்களைத் துறந்து, விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு,

विविक्तसेवी लघ्वाशी यतवाक्कायमानसः ।
ध्यानयोगपरो नित्यं वैराग्यं समुपाश्रितः ॥१८- ५२॥
விவிக்தஸேவீ லக்⁴வாஸீ² யதவாக்காயமாநஸ: |
த்⁴யாநயோக³பரோ நித்யம் வைராக்³யம் ஸமுபாஸ்²ரித: || 18- 52||
விவிக்தஸேவீ = தனி இடங்களை நாடுவோனாய்
லக்⁴வாஸீ² = எளிய உணவு உண்பவனாக
யதவாக்காயமாநஸ: = வாக்கு மனம் இவற்றை வசப்படுத்தி
நித்யம் த்⁴யாநயோக³பர: = தியான யோகத்தில் ஈடுபட்டிருந்து
வைராக்³யம் ஸமுபாஸ்²ரித: = பற்றின்மையை நன்கு பற்றியவனாய்
தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி, வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று, தியான யோகத்தில் ஈடுபட்டு, அப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய்,

अहंकारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहम् ।
विमुच्य निर्ममः शान्तो ब्रह्मभूयाय कल्पते ॥१८- ५३॥
அஹங்காரம் ப³லம் த³ர்பம் காமம் க்ரோத⁴ம் பரிக்³ரஹம் |
விமுச்ய நிர்மம: ஸா²ந்தோ ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே || 18- 53||
அஹங்காரம் ப³லம் த³ர்பம் காமம் க்ரோத⁴ம் பரிக்³ரஹம் = அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல்
விமுச்ய = விடுத்து
நிர்மம: ஸா²ந்த: = மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன்
ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே = பிரம்மமாகத் தகுவான்
அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் இவற்றை விட்டும் மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான்.

ब्रह्मभूतः प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति ।
समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम् ॥१८- ५४॥
ப்³ரஹ்மபூ⁴த: ப்ரஸந்நாத்மா ந ஸோ²சதி ந காங்க்ஷதி |
ஸம: ஸர்வேஷு பூ⁴தேஷு மத்³ப⁴க்திம் லப⁴தே பராம் || 18- 54||
ப்³ரஹ்மபூ⁴த: ப்ரஸந்நாத்மா = பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன்
ந ஸோ²சதி ந காங்க்ஷதி = துயரற்றோன், விருப்பற்றோன்
ஸர்வேஷு பூ⁴தேஷு ஸம: = எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன்
பராம் மத்³ப⁴க்திம் லப⁴தே = உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்
பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.

भक्त्या मामभिजानाति यावान्यश्चास्मि तत्त्वतः ।
ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम् ॥१८- ५५॥
ப⁴க்த்யா மாமபி⁴ஜாநாதி யாவாந்யஸ்²சாஸ்மி தத்த்வத: |
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸ²தே தத³நந்தரம் || 18- 55||
மாம் ய: ச = என்னை யார் எனவும்
யாவாந் அஸ்மி ச = எத்தன்மை உடையவன் என்றும்
ப⁴க்த்யா தத்த்வத: அபி⁴ஜாநாதி = பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான்
தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா = என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர்
தத³நந்தரம் விஸ²தே = ‘தத்’ (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்
யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான். என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர் ‘தத்’ (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.

सर्वकर्माण्यपि सदा कुर्वाणो मद्व्यपाश्रयः ।
मत्प्रसादादवाप्नोति शाश्वतं पदमव्ययम् ॥१८- ५६॥
ஸர்வகர்மாண்யபி ஸதா³ குர்வாணோ மத்³வ்யபாஸ்²ரய: |
மத்ப்ரஸாதா³த³வாப்நோதி ஸா²ஸ்²வதம் பத³மவ்யயம் || 18- 56||
மத்³வ்யபாஸ்²ரய: = என்னையே சார்பாகக் கொண்டோன்
ஸர்வ கர்மாணி = எல்லாத் தொழில்களையும்
ஸதா³ குர்வாண: அபி = எப்போதும் செய்து கொண்டிருந்தாலும்
மத்ப்ரஸாதா³த் = எனதருளால்
ஸா²ஸ்²வதம் அவ்யயம் பத³ம் = அழிவற்ற நித்தியப் பதவியை
அவாப்நோதி = எய்துகிறான்
எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன் எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.

चेतसा सर्वकर्माणि मयि संन्यस्य मत्परः ।
बुद्धियोगमुपाश्रित्य मच्चित्तः सततं भव ॥१८- ५७॥
சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர: |
பு³த்³தி⁴யோக³முபாஸ்²ரித்ய மச்சித்த: ஸததம் ப⁴வ || 18- 57||
ஸர்வகர்மாணி = செயல்களை யெல்லாம்
சேதஸா = அறிவினால்
மயி ஸந்ந்யஸ்ய = எனக்கெனத் துறந்துவிட்டு
பு³த்³தி⁴யோக³ம் உபாஸ்²ரித்ய = புத்தி யோகத்தில் சார்புற்று
மத்பர: = என்னிடத்தே ஈடுபட்டு
ஸததம் மத் சித்த: ப⁴வ = எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு
அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

मच्चित्तः सर्वदुर्गाणि मत्प्रसादात्तरिष्यसि ।
अथ चेत्त्वमहंकारान्न श्रोष्यसि विनङ्क्ष्यसि ॥१८- ५८॥
மச்சித்த: ஸர்வது³ர்கா³ணி மத்ப்ரஸாதா³த்தரிஷ்யஸி |
அத² சேத்த்வமஹங்காராந்ந ஸ்²ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி || 18- 58||
மத் சித்த: = என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய்
ஸர்வது³ர்கா³ணி = எல்லாத் தடைகளையும்
மத்ப்ரஸாதா³த் = எனதருளால்
தரிஷ்யஸி = கடந்து செல்வாய்
அத² அஹங்காராத் த்வம் ந ஸ்²ரோஷ்யஸி சேத் = அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின்
விநங்க்ஷ்யஸி = அழிந்து போவாய்
என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய். அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், பெரிய நாசத்தை அடைவாய்.

यदहंकारमाश्रित्य न योत्स्य इति मन्यसे ।
मिथ्यैष व्यवसायस्ते प्रकृतिस्त्वां नियोक्ष्यति ॥१८- ५९॥
யத³ஹங்காரமாஸ்²ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே |
மித்²யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி || 18- 59||
யத் அஹங்காரம் ஆஸ்²ரித்ய = எந்த அகங்காரத்தின் வசப்பட்டு
ந யோத்ஸ்யே இதி மந்யஸே = நான் யுத்தம் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறாயோ
தே ஏஷ: வ்யவஸாய: மித்²யா = இந்தத் தீர்மானம் பொய்யானது
ப்ரக்ருதி: த்வாம் நியோக்ஷ்யதி = (ஏனெனில்) இயற்கை உன்னை வலுவில் ஈடுபடுத்தும்
நீ அகங்காரத்திலகப்பட்டு “இனிப் போர் புரியேன்” என்று துணிவாயாயின், நினது துணிவு பொய்மைப்பட்டுப்போம். இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.

स्वभावजेन कौन्तेय निबद्धः स्वेन कर्मणा ।
कर्तुं नेच्छसि यन्मोहात्करिष्यस्यवशोऽपि तत् ॥१८- ६०॥
ஸ்வபா⁴வஜேந கௌந்தேய நிப³த்³த⁴: ஸ்வேந கர்மணா |
கர்தும் நேச்ச²ஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஸோ²ऽபி தத் || 18- 60||
கௌந்தேய = குந்தியின் மகனே!
யத் மோஹாத் கர்தும் ந இச்ச²ஸி = எந்த செயலை மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும்
தத் அபி ஸ்வேந ஸ்வபா⁴வஜேந கர்மணா = அதையும் நீ உன்னுடைய இயல்பான கர்ம வினையால்
நிப³த்³த⁴: = கட்டப் பட்டு
அவஸ²: கரிஷ்யஸி = தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்
இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ, மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.

ईश्वरः सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति ।
भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया ॥१८- ६१॥
ஈஸ்²வர: ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே²ऽர்ஜுந திஷ்ட²தி |
ப்⁴ராமயந்ஸர்வபூ⁴தாநி யந்த்ராரூடா⁴நி மாயயா || 18- 61||
அர்ஜுந = அர்ஜுனா
யந்த்ராரூடா⁴நி ஸர்வபூ⁴தாநி = உடல் என்கிற எந்திரத்தில் ஏற்றி அனைத்து உயிர்களையும்
ஈஸ்²வர: = ஈசுவரன்
மாயயா ப்⁴ராமயந் = மாயையினால் சுழற்றிக் கொண்டு
ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே² = எல்லா உயிர்களின் உள்ளத்தில்
திஷ்ட²தி = நிற்கிறான்
அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.

तमेव शरणं गच्छ सर्वभावेन भारत ।
तत्प्रसादात्परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् ॥१८- ६२॥
தமேவ ஸ²ரணம் க³ச்ச² ஸர்வபா⁴வேந பா⁴ரத |
தத்ப்ரஸாதா³த்பராம் ஸா²ந்திம் ஸ்தா²நம் ப்ராப்ஸ்யஸி ஸா²ஸ்²வதம் || 18- 62||
பா⁴ரத = பாரதா
ஸர்வபா⁴வேந = எல்லா வடிவங்களிலும்
தம் ஏவ ஸ²ரணம் க³ச்ச² = அவனையே சரணெய்து!
தத்ப்ரஸாதா³த் = அவனருளால்
பராம் ஸா²ந்திம் ஸா²ஸ்²வதம் ஸ்தா²நம் = பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை
ப்ராப்ஸ்யஸி = அடைவாய்
அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.

इति ते ज्ञानमाख्यातं गुह्याद्‌गुह्यतरं मया ।
विमृश्यैतदशेषेण यथेच्छसि तथा कुरु ॥१८- ६३॥
இதி தே ஜ்ஞாநமாக்²யாதம் கு³ஹ்யாத்³கு³ஹ்யதரம் மயா |
விம்ருஸ்²யைதத³ஸே²ஷேண யதே²ச்ச²ஸி ததா² குரு || 18- 63||
இதி கு³ஹ்யாத் கு³ஹ்யதரம் ஜ்ஞாநம் = இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை
மயா தே ஆக்²யாதம் = என்னால் உனக்கு கூறப்பட்டது
ஏதத் அஸே²ஷேண விம்ருஸ்²ய = இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து
யதா² இச்ச²ஸி ததா² குரு = எப்படி இஷ்டமோ அப்படிச் செய்
இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.

सर्वगुह्यतमं भूयः शृणु मे परमं वचः ।
इष्टोऽसि मे दृढमिति ततो वक्ष्यामि ते हितम् ॥१८- ६४॥
ஸர்வகு³ஹ்யதமம் பூ⁴ய: ஸ்²ருணு மே பரமம் வச: |
இஷ்டோऽஸி மே த்³ருட⁴மிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம் || 18- 64||
ஸர்வகு³ஹ்யதமம் = எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய
மே பரமம் வச: = என்னுடைய பரம வசனத்தை
பூ⁴ய: ஸ்²ருணு = மீட்டுமொருமுறை கேள்
மே த்³ருட⁴ம் இஷ்ட: அஸி = நீ திடமான நண்பன்
தத: ஹிதம் இதி தே வக்ஷ்யாமி = ஆதலால் நல்லது என்று உனக்கு சொல்லுகிறேன்
மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள். நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.

मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे ॥१८- ६५॥
மந்மநா ப⁴வ மத்³ப⁴க்தோ மத்³யாஜீ மாம் நமஸ்குரு |
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே || 18- 65||
மந்மநா ப⁴வ = உன் மனதை எனக்காக்குக
மத்³ப⁴க்த: = என் தொண்டனாகுக
மத்³யாஜீ = எனக்கென வேள்விசெய்க
மாம் நமஸ்குரு = என்னையே வணங்குக
மாமேவ ஏஷ்யஸி = என்னையெய்துவாய்
ஸத்யம் தே ப்ரதிஜாநே = உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்
மே ப்ரிய: அஸி = எனக்கு இனியவனாக இருக்கிறாய்.
உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.

सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज ।
अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः ॥१८- ६६॥
ஸர்வத⁴ர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸ²ரணம் வ்ரஜ |
அஹம் த்வாம் ஸர்வபாபேப்⁴யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸு²ச: || 18- 66||
ஸர்வத⁴ர்மாந் பரித்யஜ்ய = எல்லா அறங்களையும் விட்டு விட்டு
மாம் ஏகம் ஸ²ரணம் வ்ரஜ = என்னையே சரண் புகு
ஸர்வபாபேப்⁴ய: = எல்லாப் பாவங்களினின்றும்
அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி = நான் உன்னை விடுவிக்கிறேன்
மா ஸு²ச: = துயரப்படாதே
எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

इदं ते नातपस्काय नाभक्ताय कदाचन ।
न चाशुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयति ॥१८- ६७॥
இத³ம் தே நாதபஸ்காய நாப⁴க்தாய கதா³சந |
ந சாஸு²ஸ்²ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்⁴யஸூயதி || 18- 67||
தே இத³ம் கதா³சந = உனக்கு (சொல்லப் பட்ட) இதை எப்போதும்
அதபஸ்காய = தவமிலாதோனுக்கும்
அப⁴க்தாய ச = பக்தியில்லாதோனுக்கும்
அஸு²ஸ்²ரூஷவே = கேட்க விரும்பாதோனுக்கும்
ய: மாம் அப்⁴யஸூயதி = என்பால் பொறாமையுடையோனுக்கும்
ந வாச்யம் = சொல்லாதே
இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.

य इमं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति ।
भक्तिं मयि परां कृत्वा मामेवैष्यत्यसंशयः ॥१८- ६८॥
ய இமம் பரமம் கு³ஹ்யம் மத்³ப⁴க்தேஷ்வபி⁴தா⁴ஸ்யதி |
ப⁴க்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஸ²ய: || 18- 68||
ய: மயி பராம் ப⁴க்திம் க்ருத்வா = எவன் என்னிடம் உயர்ந்த பக்தி செலுத்தி
இமம் பரமம் கு³ஹ்யம் = இந்தப் பரம ரகசியத்தை (கீதையை)
மத்³ப⁴க்தேஷு ய: அபி⁴தா⁴ஸ்யதி = என் பக்தர்களிடையே சொல்லுவோனோ
மாம் ஏவ ஏஷ்யதி = என்னையே எய்துவான்
அஸம்ஸ²ய: = ஐயமில்லை
இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான். ஐயமில்லை.

न च तस्मान्मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तमः ।
भविता न च मे तस्मादन्यः प्रियतरो भुवि ॥१८- ६९॥
ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஸ்²சிந்மே ப்ரியக்ருத்தம: |
ப⁴விதா ந ச மே தஸ்மாத³ந்ய: ப்ரியதரோ பு⁴வி || 18- 69||
தஸ்மாத் மே ப்ரியக்ருத்தம = அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன்
மநுஷ்யேஷு கஸ்²சித் ச ந = மானிடருள்ளே வேறில்லை
பு⁴வி தஸ்மாத் மே = உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு
ப்ரியதர: அந்ய: = எனக்கு உகந்தவன் வேறு எவனும்
ந ப⁴விதா = ஆக மாட்டான்
மானிடருள்ளே அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் வேறில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு உகந்தவன் வேறெவனுமாகான்.

अध्येष्यते च य इमं धर्म्यं संवादमावयोः ।
ज्ञानयज्ञेन तेनाहमिष्टः स्यामिति मे मतिः ॥१८- ७०॥
அத்⁴யேஷ்யதே ச ய இமம் த⁴ர்ம்யம் ஸம்வாத³மாவயோ: |
ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: || 18- 70||
இமம் ஆவயோ: த⁴ர்ம்யம் ஸம்வாத³ம் = நம்மிருவருள் நடந்த இந்த தர்மமயமான சம்பாஷணையை
ய: அத்⁴யேஷ்யதே = எவன் கற்றறிகிறானோ
தேந ச அஹம் = அவனாலும் நான்
ஜ்ஞாநயஜ்ஞேந இஷ்ட: ஸ்யாம் = ஞான யக்ஞத்தால் திருப்தி பெற்றவனாவேன்
இதி மே மதி: = இஃதென் கொள்கை
நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த ஞான யக்ஞத்தால் நான் திருப்தி பெறுவேன். இஃதென் கொள்கை.

श्रद्धावाननसूयश्च शृणुयादपि यो नरः ।
सोऽपि मुक्तः शुभाँल्लोकान्प्राप्नुयात्पुण्यकर्मणाम् ॥१८- ७१॥
ஸ்²ரத்³தா⁴வாநநஸூயஸ்²ச ஸ்²ருணுயாத³பி யோ நர: |
ஸோऽபி முக்த: ஸு²பா⁴ம்ல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம் || 18- 71||
ய: நர: = எந்த மனிதன்
ஸ்²ரத்³தா⁴வாந் = நம்பிக்கை உடையவனாக
அநஸூய: ச = பொறாமை போக்கியவனாக
ஸ்²ருணுயாத் அபி = கேட்பது மட்டுமே செய்வானெனினும்
ஸ: அபி முக்த: = அவனும் பாவங்களில் இருந்து விடுபட்டு
புண்யகர்மணாம் ஸு²பா⁴ந் லோகாந் = புண்ணியம் செய்தவர்கள் அடையும் உலகங்களை
ப்ராப்நுயாத் = எய்துவான்
நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி இதனைக் கேட்பது மட்டுமே செய்வானெனினும், அவனும் விடுதலையடைவான், அப்பால் புண்ணியச் செயலினர் நண்ணு நல்லுலகங்களெய்துவான்.

कच्चिदेतच्छ्रुतं पार्थ त्वयैकाग्रेण चेतसा ।
कच्चिदज्ञानसंमोहः प्रनष्टस्ते धनंजय ॥१८- ७२॥
கச்சிதே³தச்ச்²ருதம் பார்த² த்வயைகாக்³ரேண சேதஸா |
கச்சித³ஜ்ஞாநஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே த⁴நஞ்ஜய || 18- 72||
பார்த² = பார்த்தா
ஏதத் த்வயா ஏகாக்³ரேண சேதஸா = உன்னால் ஒருமுகப் படுத்தப் பட்ட மனதோடு
கச்சித் ஸ்²ருதம் = கேட்கப் பட்டதா?
த⁴நஞ்ஜய! தே அஜ்ஞாநஸம்மோஹ: = தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம்
கச்சித் ப்ரநஷ்ட: = அழிந்து விட்டதா?
பார்த்தா, சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு வந்தனையா? தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம் அழிந்ததா?

अर्जुन उवाच
नष्टो मोहः स्मृतिर्लब्धा त्वत्प्रसादान्मयाच्युत ।
स्थितोऽस्मि गतसन्देहः करिष्ये वचनं तव ॥१८- ७३॥
அர்ஜுந உவாச
நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்³தா⁴ த்வத்ப்ரஸாதா³ந்மயாச்யுத |
ஸ்தி²தோऽஸ்மி க³தஸந்தே³ஹ: கரிஷ்யே வசநம் தவ || 18- 73||
அர்ஜுந உவாச அச்யுத! = அர்ஜுனன் சொல்லுகிறான், அச்சுதா
த்வத்ப்ரஸாதா³த் மோஹ: நஷ்ட: = நின்னருளாலே மயக்கம் அழிந்தது
மயா ஸ்ம்ருதி: லப்³தா⁴ = நான் நினைவு அடைந்தேன்
க³தஸந்தே³ஹ: ஸ்தி²த: அஸ்மி = ஐயம் விலகி நிற்கிறேன்
தவ வசநம் கரிஷ்யே = நீ செய்யச் சொல்வது செய்வேன்
அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.

संजय उवाच
इत्यहं वासुदेवस्य पार्थस्य च महात्मनः ।
संवादमिममश्रौषमद्भुतं रोमहर्षणम् ॥१८- ७४॥
ஸஞ்ஜய உவாச
இத்யஹம் வாஸுதே³வஸ்ய பார்த²ஸ்ய ச மஹாத்மந: |
ஸம்வாத³மிமமஸ்²ரௌஷமத்³பு⁴தம் ரோமஹர்ஷணம் || 18- 74||
ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்லுகிறான்
இதி அஹம் = இப்படி நான்
வாஸுதே³வஸ்ய மஹாத்மந: பார்த²ஸ்ய ச = வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும்
இமம் அத்³பு⁴தம் ரோமஹர்ஷணம் = இந்த அற்புதமான, மயிர்கூச்செறியும்
ஸம்வாத³ம் அஸ்²ரௌஷம் = உரையாடலைக் கேட்டேன்
சஞ்சயன் சொல்லுகிறான்: இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான – புளகந் தரக்கூடிய – அந்த சம்பாஷணையைக் கேட்டேன்.

व्यासप्रसादाच्छ्रुतवानेतद्गुह्यमहं परम् ।
योगं योगेश्वरात्कृष्णात्साक्षात्कथयतः स्वयम् ॥१८- ७५॥
வ்யாஸப்ரஸாதா³ச்ச்²ருதவாநேதத்³கு³ஹ்யமஹம் பரம் |
யோக³ம் யோகே³ஸ்²வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷாத்கத²யத: ஸ்வயம் || 18- 75||
யோகே³ஸ்²வராத் க்ருஷ்ணாத் = யோகக் கடவுளாகிய கண்ணனிடமிருந்து
பரம் கு³ஹ்யம் = பரம ரகசியமான
ஏதத் யோக³ம் ஸ்வயம் = இந்த யோகத்தை தான்
ஸாக்ஷாத் கத²யத: = நேராகவே சொல்லும்போது
அஹம் வ்யாஸப்ரஸாதா³த் = நான் வியாசனருளால்
ஸ்²ருதவாந் = கேட்டேன்
யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது நான் அதை வியாசனருளால் கேட்டேன்.

राजन्संस्मृत्य संस्मृत्य संवादमिममद्भुतम् ।
केशवार्जुनयोः पुण्यं हृष्यामि च मुहुर्मुहुः ॥१८- ७६॥
ராஜந்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாத³மிமமத்³பு⁴தம் |
கேஸ²வார்ஜுநயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு: || 18- 76||
ராஜந் = அரசனே
கேஸ²வார்ஜுநயோ: = கேசவ அர்ஜுனரின்
அத்³பு⁴தம் புண்யம் ச இமம் ஸம்வாத³ம் = வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை
ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய = நினைத்து நினைத்து
முஹுர்முஹு: = மீண்டும் மீண்டும்
ஹ்ருஷ்யாமி = மகிழ்கிறேன்
அரசனே, கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை நினைத்து நினைத்து நான், மீட்டு மீட்டும் களிப்பெய்துகிறேன்.

तच्च संस्मृत्य संस्मृत्य रूपमत्यद्भुतं हरेः ।
विस्मयो मे महान् राजन्हृष्यामि च पुनः पुनः ॥१८- ७७॥
தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்³பு⁴தம் ஹரே: |
விஸ்மயோ மே மஹாந் ராஜந்ஹ்ருஷ்யாமி ச புந: புந: || 18- 77||
ராஜந் = அரசனே!
ஹரே: அதி அத்³பு⁴தம் = ஹரியின் மிகவும் அற்புதமான
தத் ரூபம் ச = அந்த ரூபத்தை
ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய = நினைத்து நினைத்து
மே மஹாந் விஸ்மய: = எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது
ச புந: புந: ஹ்ருஷ்யாமி = மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்
அரசனே, ஹரியின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது; மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்.

यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः ।
तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम ॥१८- ७८॥
யத்ர யோகே³ஸ்²வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ² த⁴நுர்த⁴ர: |
தத்ர ஸ்ரீர்விஜயோ பூ⁴திர்த்⁴ருவா நீதிர்மதிர்மம || 18- 78||
யத்ர யோகே³ஸ்²வர: க்ருஷ்ண: = எங்கு யோகக் கடவுள் கண்ணனும்
யத்ர த⁴நுர்த⁴ர: பார்த²: = எங்கு வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும் இருக்கிறார்களோ
தத்ர ஸ்ரீ: விஜய: பூ⁴தி: = அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் ஐஸ்வர்யமும்
த்⁴ருவா நீதி = நிலை தவறாத நீதியும் (இருக்கும்)
மம மதி: = என் உறுதியான கருத்து (இது)
கண்ணன் யோகக் கடவுள், எங்குளன், வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும்? அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும்; இஃதென் மதம்.


ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रिकृष्णार्जुन सम्वादे मोक्षसन्नियासयोगो नामष्टादशोऽध्याय: || 18 ||
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘மோக்ஷ ஸந்நியாச யோகம்’ எனப் பெயர் படைத்த
பதினெட்டாம் அத்தியாயம் நிறைவுற்றது.