ஹர ஹர நம: பார்வதி பதயேஹர ஹர மஹா தேவா

Wednesday, May 11, 2011

சிவபெருமான் உமாதேவி

சிவம் என்றாலே மங்கலம். மங்கலகரமான இறைவன் மாங்கல்ய வரம் அருளும் இடம் தான் திருமணஞ்சேரி.
அம்மையும், அப்பனும் அருள்புரியும் இந்த தலத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் மணமாலை வேண்டி வழிபடுவது இத்தலத்தின் தனிச்சிறப்பு.

தல வரலாறு: உமாதேவி ஒருமுறை கைலையில் சிவபெருமானை வணங்கி மற்றொருமுறை சிவபெருமானை பூவுலகில் மணந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தாள். சிவபிரானும் கருணை கொண்டு அவ்வாறே வாக்களித்தார். அதன்பின் ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார்.

உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திரானி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார். சுய உருவம் பெற்ற உமாதேவி பரத முனிவரிடம்  வளர்ந்து சிவபெருமானை மணம் செய்வதற்காக தவம் புரிந்தார்.
அவரது தவத்தை மெச்சிய இறைவன், அவர் முன்தோன்றி, தேவியின் திருக்கரத்தைப் பற்றினார். அப்போது, உமாதேவி, “சுவாமி… நான் உங்களுக்குத் தான் சொந்தம். என்றாலும், ஒரு வேண்டுகோள். என் தாய் தந்தையர் அறிய என்னை மணம் செய்து கொள்ள வேண்டும்” என்றாள். இறைவனும் அதை ஏற்றுக் கொண்டு அவ்வாறே செய்தார்.
உமையாளின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் அம்மையாரின் விதிமுறைப்படி அவரது இல்லத்திலேயே மணம் செய்து கொண்டார். அதனால் அவர் `சொன்னவாறறிவார்’ என்றும் திருநாமத்தைப் பெற்றார்.
வரும் வேளையில் அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்துகொள்ள சிவபெருமான் தீர்மானித்தார். பரத மகரிஷி நடத்திய யாக வேள்விக் குண்டத்தில் சிவபெருமான் தோன்றி பசு உருவில் இருந்த உமாதேவிக்கு சுய உருவம் கொடுத்து இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது. சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்ற இத்தலம் திருமணஞ்சேரி என்று பெயர் பெற்றது.

No comments: