க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
இதில் தேகம், ஆத்மா இவைகளுடைய சொரூபமும் இவைகள் ஒன்றோடொன்று சேர்வதற்குக் காரணமும் கூறப்படுகின்றன. தேகம் என்பது பிரகிருதியின் விகாரமாகும். அது ஐந்து பூதங்களும் பதினோரு புலன்களும் அடங்கியது.இத்தேகத்தின் சேர்க்கையால்தான் ஆத்மாவுக்கு அற்ப விஷயங்களில் விருப்பமும், இன்பம், துன்பம், கோபம், தாபம் முதலியவைகளும் உண்டாகின்றன. கைவல்ய நிலை பெற்ற ஆத்மாவிற்கு இவை ஒன்றுமில்லை. அத்தகைய நிலையைப் பெறவேண்டுமானால் கர்வம், டம்பம் இவைகளை விடவேண்டும்.
ஆசாரியனைப் பணிந்து அவனருளால் தூய்மை பெற்றுப் புலன்களை அடக்க வேண்டும். வேறு பலனைக் கோராமல் கடவுளைத் தியானிக்க வேண்டும். ஆத்மாவுக்கு உண்மையில் பிறப்பு இறப்பு கிடையாது. தேகசம்பந்தமே பிறப்பெனவும், அதன் பிரிவே இறப்பெனவும் கூறப்படும்.
அறிவற்ற தேகமானது ஆத்ம சம்பந்தத்தால் பற்பல காரியங்களைச் செய்கிறது. இவ்வித ஆத்ம சொரூபத்தைக் கர்ம யோகத்தினாலும், ஞானயோகத்தினாலும் பெறலாம். தாவர, ஜங்கமங்களெல்லாம் ஆத்ம பிரகிருதியின் சேர்க்கையால் உண்டாகின்றன.
अर्जुन उवाच
प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च |
एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव ||
அர்ஜுந உவாசप्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च |
एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव ||
ப்ரக்ருதிம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச |
ஏதத்³வேதி³துமிச்சா²மி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஸ²வ ||
அர்ஜுந உவாச கேஸ²வ = அர்ஜுனன் சொல்லுகின்றான், கேசவா
ப்ரக்ருதிம் புருஷம் க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ ச = பிரகிருதி, புருஷன், க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன்
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஏவ ச = ஞானம், ஞேயம் என்னும்
ஏதத் வேதி³தும் = இவற்றை அறிய
இச்சா²மி = விரும்புகிறேன்
श्रीभगवानुवाच
इदम् शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते ।
एतद्यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः ॥१३- १॥
ஸ்ரீப⁴க³வாநுவாசइदम् शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते ।
एतद्यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः ॥१३- १॥
இத³ம் ஸ²ரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபி⁴தீ⁴யதே |
ஏதத்³யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்³வித³: || 13- 1||
ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
கௌந்தேய = குந்தி மகனே
இத³ம் ஸ²ரீரம் க்ஷேத்ரம் இதி = இந்த உடம்பு க்ஷேத்திரம் என்று
அபி⁴தீ⁴யதே = சொல்லப்படுகிறது
ஏதத் ய: வேத்தி = இதனை எவன் அறிகிறானோ
தம் க்ஷேத்ரஜ்ஞ இதி = அவனை க்ஷேத்திரக்ஞன் என்று
தத்³வித³: ப்ராஹு: = ஞானிகள் கூறுகிறார்கள்
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: குந்தி மகனே, இந்த உடம்பு க்ஷேத்திரம் என்று சொல்லப்படுகிறது. இதனை அறிந்து நிற்போனை க்ஷேத்திரக்ஞ னென்று பிரம்ம ஞானிகள் சொல்லுகிறார்கள்.
क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत ।
क्षेत्रक्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम ॥१३- २॥
க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்³தி⁴ ஸர்வக்ஷேத்ரேஷு பா⁴ரத | क्षेत्रक्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम ॥१३- २॥
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம || 13- 2||
பா⁴ரத = பாரதா,
ஸர்வக்ஷேத்ரேஷு = எல்லா க்ஷேத்திரங்களிலும்
க்ஷேத்ரஜ்ஞம் அபி = க்ஷேத்திரக்ஞனும்
மாம் வித்³தி⁴ = நானே என்றுணர்
ச க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோ: = க்ஷேத்திரமும், க்ஷேத்திரக்ஞனும் (பற்றி அறியும்)
யத் ஜ்ஞாநம் = எது ஞானம்
தத் ஜ்ஞாநம் மம மதம் = அதுவே ஞானமென்பது என் கொள்கை
பாரதா, எல்லா க்ஷேத்திரங்களிலும் க்ஷேத்திரக்ஞன் நானே என்றுணர். க்ஷேத்திரமும், க்ஷேத்திரக்ஞனும் எவை என்றறியுஞ் ஞானமே உண்மையான ஞானமென்பது என் கொள்கை.
तत्क्षेत्रं यच्च यादृक्च यद्विकारि यतश्च यत् ।
स च यो यत्प्रभावश्च तत्समासेन मे शृणु ॥१३- ३॥
தத்க்ஷேத்ரம் யச்ச யாத்³ருக்ச யத்³விகாரி யதஸ்²ச யத் | स च यो यत्प्रभावश्च तत्समासेन मे शृणु ॥१३- ३॥
ஸ ச யோ யத்ப்ரபா⁴வஸ்²ச தத்ஸமாஸேந மே ஸ்²ருணு || 13- 3||
தத் க்ஷேத்ரம் யத் = அந்த க்ஷேத்திரமென்பது யாது?
ச யாத்³ருக் = எவ்வகைப்பட்டது?
ச யத்³விகாரி = என்ன மாறுதல்களுடையது?
யத: யத் ச = எங்கிருந்து வந்தது?
ஸ: ய: ச = அவன் (க்ஷேத்திரக்ஞன்) யார்?
யத்ப்ரபா⁴வ ச = அவன் பெருமை எப்படிப்பட்டது?
தத் ஸமாஸேந மே ஸ்²ருணு = இவற்றை சுருக்கமாக என்னிடமிருந்து கேள்
அந்த க்ஷேத்திரமென்பது யாது? எவ்வகைப்பட்டது? என்ன மாறுதல்களுடையது? எங்கிருந்து வந்தது? க்ஷேத்திரக்ஞன் யார்? அவன் பெருமை எப்படிப்பட்டது? இவற்றை நான் சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேள்.
ऋषिभिर्बहुधा गीतं छन्दोभिर्विविधैः पृथक् ।
ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमद्भिर्विनिश्चितैः ॥१३- ४॥
ருஷிபி⁴ர்ப³ஹுதா⁴ கீ³தம் ச²ந்தோ³பி⁴ர்விவிதை⁴: ப்ருத²க் | ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमद्भिर्विनिश्चितैः ॥१३- ४॥
ப்³ரஹ்மஸூத்ரபதை³ஸ்²சைவ ஹேதுமத்³பி⁴ர்விநிஸ்²சிதை: || 13- 4||
ருஷிபி⁴: ப³ஹுதா⁴ கீ³தம் = ரிஷிகளால் பலவகைகளிலே பாடப் பட்டது
விவிதை⁴: ச²ந்தோ³பி⁴: ப்ருத²க் = பலவிதமான சந்தங்கள் (வேத மந்திரங்கள்) மூலமாகவும் தனித்தனியே கூறப் பட்டது
ச விநிஸ்²சிதை: ஹேதுமத்³பி⁴ = நல்ல நிச்சயமுடையனவுமாகிய, யுக்திகளுடன் விளங்கும்
ப்³ரஹ்மஸூத்ரபதை³: ஏவ = பிரம்ம சூத்திர பதங்களிலும் இசைக்கப்பட்டது
அது (க்ஷேத்திரம்) ரிஷிகளால் பலவகைகளிலே பல்வேறு சந்தங்களில் பாடப்பட்டது. ஊகம் நிறைந்தனவும், நல்ல நிச்சயமுடையனவுமாகிய பிரம்ம சூத்திர பதங்களில் இசைக்கப்பட்டது.
महाभूतान्यहंकारो बुद्धिरव्यक्तमेव च ।
इन्द्रियाणि दशैकं च पञ्च चेन्द्रियगोचराः ॥१३- ५॥
மஹாபூ⁴தாந்யஹங்காரோ பு³த்³தி⁴ரவ்யக்தமேவ ச | इन्द्रियाणि दशैकं च पञ्च चेन्द्रियगोचराः ॥१३- ५॥
இந்த்³ரியாணி த³ஸை²கம் ச பஞ்ச சேந்த்³ரியகோ³சரா: || 13- 5||
மஹாபூ⁴தாநி அஹங்கார: பு³த்³தி⁴: ச = மகா பூதங்கள் (ஐம் பூதங்கள்), அகங்காரம், புத்தி
அவ்யக்தம் ஏவ = அவ்யக்தம்
த³ஸ² இந்த்³ரியாணி ச = பத்து இந்திரியங்கள் (புலன்கள்)
ஏகம் ச = மனதுடன் சேர்த்து (பதினொன்று)
பஞ்ச இந்த்³ரியகோ³சரா: = இந்திரிய நிலங்கள் ஐந்து (சுவை, ஒளி, ஓசை போன்ற புலன் நுகர் பொருட்கள்)
மகா பூதங்கள் அகங்காரம், புத்தி, அவ்யக்தம், பதினோரு இந்திரியங்கள், இந்திரிய நிலங்கள் ஐந்து,
इच्छा द्वेषः सुखं दुःखं संघातश्चेतना धृतिः ।
एतत्क्षेत्रं समासेन सविकारमुदाहृतम् ॥१३- ६॥
இச்சா² த்³வேஷ: ஸுக²ம் து³:க²ம் ஸங்கா⁴தஸ்²சேதநா த்⁴ருதி: | एतत्क्षेत्रं समासेन सविकारमुदाहृतम् ॥१३- ६॥
ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதா³ஹ்ருதம் || 13- 6||
இச்சா² த்³வேஷ: = வேட்கை, பகைமை,
ஸுக²ம் து³:க²ம் = இன்பம், துன்பம்,
ஸங்கா⁴த: சேதநா = உடம்பு, சைதன்ய சக்தி
த்⁴ருதி: = உள்ளத்துறுதி
ஸவிகாரம் = ஆகிய மாறுபாடுகள் உடைய
ஏதத் க்ஷேத்ரம் = இந்த க்ஷேத்திரம்
ஸமாஸேந உதா³ஹ்ருதம் = சுருக்கி சொல்லப் பட்டது
வேட்கை, பகைமை, இன்பம், துன்பம், உடம்பு, உணவு, உள்ளத்துறுதி இவையே க்ஷேத்திரமும் அதன் வேறுபாடுகளுமாம் என உனக்குச் சுருக்கிக் காட்டினேன்.
अमानित्वमदम्भित्वमहिंसा क्षान्तिरार्जवम् ।
आचार्योपासनं शौचं स्थैर्यमात्मविनिग्रहः ॥१३- ७॥
அமாநித்வமத³ம்பி⁴த்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் | आचार्योपासनं शौचं स्थैर्यमात्मविनिग्रहः ॥१३- ७॥
ஆசார்யோபாஸநம் ஸௌ²சம் ஸ்தை²ர்யமாத்மவிநிக்³ரஹ: || 13- 7||
அமாநித்வம் = கர்வமின்மை,
அத³ம்பி⁴த்வம் = டம்பமின்மை,
அஹிம்ஸா = ஹிம்சை செய்யாமை,
க்ஷாந்தி = பொறுமை,
ஆர்ஜவம் = நேர்மை,
ஆசார்ய உபாஸநம் = ஆசாரியனை வழிபடுதல்,
ஸௌ²சம் = தூய்மை,
ஸ்தை²ர்யம் = ஸ்திரத்தன்மை,
ஆத்மவிநிக்³ரஹ: = தன்னைக் கட்டுதல்
கர்வமின்மை, டம்பமின்மை, ஹிம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை, தன்னைக் கட்டுதல்.
इन्द्रियार्थेषु वैराग्यमनहंकार एव च ।
जन्ममृत्युजराव्याधिदुःखदोषानुदर्शनम् ॥१३- ८॥
இந்த்³ரியார்தே²ஷு வைராக்³யமநஹங்கார ஏவ ச | जन्ममृत्युजराव्याधिदुःखदोषानुदर्शनम् ॥१३- ८॥
ஜந்மம்ருத்யுஜராவ்யாதி⁴து³:க²தோ³ஷாநுத³ர்ஸ²நம் || 13- 8||
இந்த்³ரிய அர்தே²ஷு வைராக்³யம் ச = இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை
அநஹங்கார: ஏவ = அகங்காரம் இல்லாமை,
ஜந்ம ம்ருத்யு = பிறப்பு, இறப்பு,
ஜராவ்யாதி⁴ = நரை, நோய்,
து³:க² தோ³ஷ = துக்கம், தோஷம்
அநுத³ர்ஸ²நம் = இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை
இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அகங்காரம் இல்லாமை, பிறப்பு, இறப்பு, நரை, நோய், துக்கம், தோஷம் இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை.
असक्तिरनभिष्वङ्गः पुत्रदारगृहादिषु ।
नित्यं च समचित्तत्वमिष्टानिष्टोपपत्तिषु ॥१३- ९॥
அஸக்திரநபி⁴ஷ்வங்க³: புத்ரதா³ரக்³ருஹாதி³ஷு | नित्यं च समचित्तत्वमिष्टानिष्टोपपत्तिषु ॥१३- ९॥
நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு || 13- 9||
புத்ர தா³ர க்³ருஹாதி³ஷு = மகனையும் மனைவியையும், வீட்டையும்
அஸக்தி = பற்றின்மை
அநபி⁴ஷ்வங்க³: = தன்னுடைமையெனக் கருதாமை,
ச = மேலும்
இஷ்ட அநிஷ்ட உபபத்திஷு = விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே
நித்யம் ஸமசித்தத்வம் = எப்போதுமே சமசித்தமுடைமை
பற்றின்மை, மகனையும் மனைவியையும், வீட்டையும் தன்னுடைமையெனக் கருதாமை, விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே சமசித்தமுடைமை
मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणी ।
विविक्तदेशसेवित्वमरतिर्जनसंसदि ॥१३- १०॥
மயி சாநந்யயோகே³ந ப⁴க்திரவ்யபி⁴சாரிணீ | विविक्तदेशसेवित्वमरतिर्जनसंसदि ॥१३- १०॥
விவிக்ததே³ஸ²ஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி³ || 13- 10||
மயி அநந்யயோகே³ந = என்னிடம் பிறழ்ச்சியற்ற யோகத்துடன்
அவ்யபி⁴சாரிணீ ப⁴க்தி: ச = தவறுதலின்றிச் செலுத்தப்படும் பக்தி
விவிக்த தே³ஸ² ஸேவித்வம் = தனியிடங்களை மேவுதல்
ஜநஸம்ஸதி³ அரதி = ஜனக் கூட்டத்தில் விருப்பமின்மை
பிறழ்ச்சியற்ற யோகத்துடன் என்னிடம் தவறுதலின்றிச் செலுத்தப்படும் பக்தி, தனியிடங்களை மேவுதல், ஜனக் கூட்டத்தில் விருப்பமின்மை
अध्यात्मज्ञाननित्यत्वं तत्त्वज्ञानार्थदर्शनम् ।
एतज्ज्ञानमिति प्रोक्तमज्ञानं यदतोऽन्यथा ॥१३- ११॥
அத்⁴யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்த²த³ர்ஸ²நம் |एतज्ज्ञानमिति प्रोक्तमज्ञानं यदतोऽन्यथा ॥१३- ११॥
ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யத³தோऽந்யதா² || 13- 11||
அத்⁴யாத்ம ஜ்ஞாந நித்யத்வம் = ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை
தத்த்வஜ்ஞாந அர்த² த³ர்ஸ²நம் = தத்துவ ஞானத்தில் பொருளுணர்வு
ஏதத் ஜ்ஞாநம் = இவை ஞான மெனப்படும்
யத் அத: அந்யதா² அஜ்ஞாநம் = இவற்றினிறும் வேறுபட்டது அஞ்ஞானம்
இதி ப்ரோக்தம் = என்று சொல்லப் பட்டது
ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்துவ ஞானத்தில் பொருளுணர்வு – இவை ஞான மெனப்படும். இவற்றினிறும் வேறுபட்டது அஞ்ஞானம்.
ज्ञेयं यत्तत्प्रवक्ष्यामि यज्ज्ञात्वामृतमश्नुते ।
अनादि मत्परं ब्रह्म न सत्तन्नासदुच्यते ॥१३- १२॥
ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ருதமஸ்²நுதே | अनादि मत्परं ब्रह्म न सत्तन्नासदुच्यते ॥१३- १२॥
அநாதி³ மத்பரம் ப்³ரஹ்ம ந ஸத்தந்நாஸது³ச்யதே || 13- 12||
யத் ஜ்ஞேயம் = எது அறியப் படவேண்டியதோ
யத் ஜ்ஞாத்வா = எதை அறிந்தால்
அம்ருதம் அஸ்²நுதே = சாகாமல் இருப்பானோ
தத் ப்ரவக்ஷ்யாமி = அதை விளக்கிக் கூறுவேன்
அநாதி³ மத் = அநாதியாகிய
பரம் ப்³ரஹ்ம = பரப்பிரம்மம்
ஸத் ந உச்யதே = “சத்” என்பதுமில்லை
அஸத் ந = “அசத்” என்பதுமில்லை
ஞேயம் எதுவென்பதைச் சொல்கிறேன். அதை அறிந்தால் நீ சாகாமல் இருப்பாய். அநாதியாகிய பரப்பிரம்மம், அதை “சத்” என்பதுமில்லை, “அசத்” என்பதுமில்லை.
सर्वतः पाणिपादं तत्सर्वतोऽक्षिशिरोमुखम् ।
सर्वतः श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति ॥१३- १३॥
ஸர்வத: பாணிபாத³ம் தத்ஸர்வதோऽக்ஷிஸி²ரோமுக²ம் | सर्वतः श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति ॥१३- १३॥
ஸர்வத: ஸ்²ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்ட²தி || 13- 13||
தத் ஸர்வத: பாணிபாத³ம் = அது எங்கும் கைகால்களுடையது
ஸர்வதோ அக்ஷி ஸி²ர; முக²ம் = எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது
ஸர்வத: ஸ்²ருதிமத் = எங்கும் செவியுடையது
லோகே ஸர்வம் ஆவ்ருத்ய திஷ்ட²தி = உலகத்தில் எதனையும் சூழ்ந்து நிற்பது.
அது எங்கும் கைகால்களுடையது. எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது; எங்கும் செவியுடையது; உலகத்தில் எதனையும் சூழ்ந்துநிற்பது.
सर्वेन्द्रियगुणाभासं सर्वेन्द्रियविवर्जितम् ।
असक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च ॥१३- १४॥
ஸர்வேந்த்³ரியகு³ணாபா⁴ஸம் ஸர்வேந்த்³ரியவிவர்ஜிதம் | असक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च ॥१३- १४॥
அஸக்தம் ஸர்வப்⁴ருச்சைவ நிர்கு³ணம் கு³ணபோ⁴க்த்ரு ச || 13- 14||
ஸர்வ இந்த்³ரிய கு³ண ஆபா⁴ஸம் = எல்லா இந்திரிய குணங்களும் வாய்ந்தொளிர்வது
ஸர்வ இந்த்³ரிய விவர்ஜிதம் = எல்லா இந்திரியங்களுக்கும் புறம்பானது
ச அஸக்தம் ஏவ = பற்றில்லாதது
ஸர்வப்⁴ருத் ச = அனைத்தையும் பொறுப்பது
நிர்கு³ணம் கு³ணபோ⁴க்த்ரு = குணமற்றது; குணங்களைத் துய்ப்பது
எல்லா இந்திரிய குணங்களும் வாய்ந்தொளிர்வது; எல்லா இந்திரியங்களுக்கும் புறம்பானது; பற்றில்லாதது; அனைத்தையும் பொறுப்பது; குணமற்றது; குணங்களைத் துய்ப்பது.
बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥१३- १५॥
ப³ஹிரந்தஸ்²ச பூ⁴தாநாமசரம் சரமேவ ச | सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥१३- १५॥
ஸூக்ஷ்மத்வாத்தத³விஜ்ஞேயம் தூ³ரஸ்த²ம் சாந்திகே ச தத் || 13- 15||
பூ⁴தாநாம் அந்த: ப³ஹி: ச = பூதங்களுக்கு உள்ளும் புறமுமாவது
சரம் அசரம் ஏவ ச = அசரமும் சரமுமாவது
தத் ஸூக்ஷ்மத்வாத் = நுண்மையால்
அவிஜ்ஞேயம் = அறிய முடியாதது
அந்திகே ச = அருகில் இருப்பது
தூ³ரஸ்த²ம் ச தத் = தூரமானது
பூதங்களுக்கு உள்ளும் புறமுமாவது; அசரமும் சரமுமாவது; நுண்மையால் அறிவரியது; தூரமானது; அருகிலிருப்பது.
अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम् ।
भूतभर्तृ च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च ॥१३- १६॥
அவிப⁴க்தம் ச பூ⁴தேஷு விப⁴க்தமிவ ச ஸ்தி²தம் | भूतभर्तृ च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च ॥१३- १६॥
பூ⁴தப⁴ர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்³ரஸிஷ்ணு ப்ரப⁴விஷ்ணு ச || 13- 16||
ஜ்ஞேயம் தத் = அறியத் தக்க அது (பிரம்மம்)
பூ⁴தேஷு அவிப⁴க்தம் ச = உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல்
விப⁴க்தம் இவ ச ஸ்தி²தம் = பிரிவுபட்டதுபோல் நிற்பது.
பூ⁴தப⁴ர்த்ரு = பூதங்களைத் தாங்குவது
ச க்³ரஸிஷ்ணு = அவற்றை உண்பது
ச ப்ரப⁴விஷ்ணு = பிறப்பிப்பது
உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டதுபோல் நிற்பது. அதுவே பூதங்களைத் தாங்குவது என்றறி; அவற்றை உண்பது, பிறப்பிப்பது.
ज्योतिषामपि तज्ज्योतिस्तमसः परमुच्यते ।
ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम् ॥१३- १७॥
ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே | ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम् ॥१३- १७॥
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநக³ம்யம் ஹ்ருதி³ ஸர்வஸ்ய விஷ்டி²தம் || 13- 17||
தத் ஜ்யோதிஷாம் அபி ஜ்யோதி: = ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி
தமஸ: = இருளிலும்
பரம் ஜ்ஞாநம் = உயர்ந்த ஞானம்
ஜ்ஞேயம் = அறியத் தக்கது
ஜ்ஞாநக³ம்யம் = ஞானத்தால் எய்தப்படுபொருள்
ஸர்வஸ்ய ஹ்ருதி³ விஷ்டி²தம் = எல்லாவற்றின் அகத்திலும் அமர்ந்தது
உச்யதே = என்று கூறப் படுகிறது
ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி; இருளிலும் உயர்ந்ததென்ப. அதுவே ஞானம்; ஞேயம்; ஞானத்தால் எய்தப்படுபொருள்; எல்லாவற்றின் அகத்திலும் அமர்ந்தது.
इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः ।
मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते ॥१३- १८॥
இதி க்ஷேத்ரம் ததா² ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத: | मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते ॥१३- १८॥
மத்³ப⁴க்த ஏதத்³விஜ்ஞாய மத்³பா⁴வாயோபபத்³யதே || 13- 18||
இதி க்ஷேத்ரம் = இங்ஙனம் க்ஷேத்திரம்
ததா² ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச = அவ்வாறே அறிவு (ஞானம்), அறியப் படு பொருள் (ஞேயம்)
ஸமாஸத: உக்தம் = சுருக்கமாகச் சொல்லப் பட்டது
மத்³ப⁴க்த: ஏதத் விஜ்ஞாய = என் பக்தன் இதையறிந்து
மத்³பா⁴வாய உபபத்³யதே = எனது தன்மையை அடைகிறான்
இங்ஙனம் க்ஷேத்திரம், ஞானம், ஞேயன் என்பனவற்றைச் சுருக்கமாகச் சொன்னேன். என் பக்தன் இதையறிந்து எனது தன்மையை அடைகிறான்.
प्रकृतिं पुरुषं चैव विद्ध्यनादी उभावपि ।
विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसंभवान् ॥१३- १९॥
ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்³த்⁴யநாதீ³ உபா⁴வபி |विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसंभवान् ॥१३- १९॥
விகாராந்ஸ்²ச கு³ணாந்ஸ்²சைவ வித்³தி⁴ ப்ரக்ருதிஸம்ப⁴வாந் || 13- 19||
ப்ரக்ருதிம் புருஷம் ச உபௌ⁴ ஏவ = பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும்
அநாதீ³ வித்³தி⁴ ச = அநாதி (ஆரம்பம் இல்லாதது) என்றுணர்
விகாராந் ச = வேறுபாடுகளும்
கு³ணாந் அபி = குணங்களும்
ப்ரக்ருதிஸம்ப⁴வாந் ஏவ = பிரகிருதியிலேயே பிறப்பன என்று
வித்³தி⁴= அறிந்து கொள்
பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும் அநாதி என்றுணர். வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியிலேயே பிறப்பன என்றுணர்.
कार्यकरणकर्तृत्वे हेतुः प्रकृतिरुच्यते ।
पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते ॥१३- २०॥
கார்யகரணகர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிருச்யதே | पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते ॥१३- २०॥
புருஷ: ஸுக²து³:கா²நாம் போ⁴க்த்ருத்வே ஹேதுருச்யதே || 13- 20||
கார்ய கரண கர்த்ருத்வே = கார்யங்களையும் கரணங்களையும் ஆக்கும் விஷயத்தில்
ப்ரக்ருதி ஹேது: உச்யதே = பிரகிருதியே காரணம் என்பர்
ஸுக² து³:கா²நாம் போ⁴க்த்ருத்வே = சுக துக்கங்களை அனுபவிப்பதில்
புருஷ: ஹேது உச்யதே = புருஷன் (ஜீவாத்மா) காரணம் என்பர்
கார்ய காரணங்களை ஆக்கும் ஹேது பிரகிருதி என்பர். சுக துக்கங்களை உணரும் ஹேது புருஷனென்பர்.
पुरुषः प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान्गुणान् ।
कारणं गुणसङ्गोऽस्य सदसद्योनिजन्मसु ॥१३- २१॥
புருஷ: ப்ரக்ருதிஸ்தோ² ஹி பு⁴ங்க்தே ப்ரக்ருதிஜாந்கு³ணாந் | कारणं गुणसङ्गोऽस्य सदसद्योनिजन्मसु ॥१३- २१॥
காரணம் கு³ணஸங்கோ³ऽஸ்ய ஸத³ஸத்³யோநிஜந்மஸு || 13- 21||
ப்ரக்ருதிஸ்த²: ஹி = பிரகிருதியில் நின்றுகொண்டு
புருஷ: = புருஷன் (ஜீவாத்மா)
ப்ரக்ருதிஜாந் கு³ணாந் பு⁴ங்க்தே = பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான்
கு³ணஸங்க³: = குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே
அஸ்ய ஸத் அஸத் யோநி ஜந்மஸு = இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜென்மங்களில் பிறப்பதற்குக்
காரணம் = காரணமாகிறது
புருஷன் பிரகிருதியில் நின்றுகொண்டு, பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான். குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜென்மங்களில் பிறப்பதற்குக் காரணமாகிறது.
उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः ।
परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन्पुरुषः परः ॥१३- २२॥
உபத்³ரஷ்டாநுமந்தா ச ப⁴ர்தா போ⁴க்தா மஹேஸ்²வர: | परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन्पुरुषः परः ॥१३- २२॥
பரமாத்மேதி சாப்யுக்தோ தே³ஹேऽஸ்மிந்புருஷ: பர: || 13- 22||
உபத்³ரஷ்டா அநுமந்தா ச = மேற்பார்ப்போன், அனுமதி தருவோன்
ப⁴ர்தா போ⁴க்தா மஹேஸ்²வர: = சுமப்பான், உண்பான், மகேசுவரன்
இதி அஸ்மிந் தே³ஹே பர புருஷ: = இங்ஙனம் உடம்பிலுள்ள பரமபுருஷன்
பரமாத்மா அபி ச உக்த: = பரமாத்மாவென்றே சொல்லப்படுகிறான்
மேற்பார்ப்போன், அனுமதி தருவோன், சுமப்பான், உண்பான், மகேசுவரன் இங்ஙனம் உடம்பிலுள்ள பரமபுருஷன் பரமாத்மாவென்றே சொல்லப்படுகிறான்.
य एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह ।
सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते ॥१३- २३॥
ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச கு³ணை: ஸஹ | सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते ॥१३- २३॥
ஸர்வதா² வர்தமாநோऽபி ந ஸ பூ⁴யோऽபி⁴ஜாயதே || 13- 23||
ஏவம் புருஷம் ப்ரக்ருதிம் ச = இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும்,
கு³ணை: ஸஹ = அதன் குணங்களையும்
ய: வேத்தி = எவன் அறிகிறானோ
ஸ: ஸர்வதா² வர்தமாந: அபி = அவன் எல்லா நெறிகளிலும் இயங்குவானெனினும்
பூ⁴ய: ந அபி⁴ஜாயதே = மறு பிறப்பில்லை
இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும், அதன் குணங்களையு மறிந்தோன் எல்லா நெறிகளிலும் இயங்குவானெனினும், அவனுக்கு மறு பிறப்பில்லை.
ध्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना ।
अन्ये सांख्येन योगेन कर्मयोगेन चापरे ॥१३- २४॥
த்⁴யாநேநாத்மநி பஸ்²யந்தி கேசிதா³த்மாநமாத்மநா | अन्ये सांख्येन योगेन कर्मयोगेन चापरे ॥१३- २४॥
அந்யே ஸாங்க்²யேந யோகே³ந கர்மயோகே³ந சாபரே || 13- 24||
கேசித் ஆத்மாநம் ஆத்மநா = சிலர் ஆத்மாவில், ஆத்மாவால்
த்⁴யாநேந ஆத்மநி பஸ்²யந்தி = தியானத்தின் மூலமாக ஆத்மாவை அறிகிறார்கள்
அந்யே ஸாங்க்²யேந யோகே³ந = பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள்
அபரே கர்மயோகே³ந ச = பிறர் கர்ம யோகத்தால் அறிகிறார்கள்
சிலர் ஆத்மாவில், ஆத்மாவால் ஆத்மாவை அறிகிறார்கள்; பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள்; பிறர் கர்ம யோகத்தால் அறிகிறார்கள்.
अन्ये त्वेवमजानन्तः श्रुत्वान्येभ्य उपासते ।
तेऽपि चातितरन्त्येव मृत्युं श्रुतिपरायणाः ॥१३- २५॥
அந்யே த்வேவமஜாநந்த: ஸ்²ருத்வாந்யேப்⁴ய உபாஸதே | तेऽपि चातितरन्त्येव मृत्युं श्रुतिपरायणाः ॥१३- २५॥
தேऽபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ஸ்²ருதிபராயணா: || 13- 25||
து அந்யே ஏவம் அஜாநந்த: = வேறு சிலர் இவ்வாறு அறியாமல்
அந்யேப்⁴ய ஸ்²ருத்வா = அந்நியரிடமிருந்து பெற்ற சுருதிகளை
உபாஸதே ச = வழிபடுகிறார்கள்
தே ஸ்²ருதிபராயணா: அபி = அவர்களும் அந்தச் சுருதிகளின்படி ஒழுகுவாராயின்
ம்ருத்யும் அதிதரந்தி ஏவ = மரணத்தை வெல்வார்
இங்ஙன மறியாத மற்றைப் பிறர் அந்நியரிடமிருந்து பெற்ற சுருதிகளை வழிபடுகிறார்கள். அவர்களும் அந்தச் சுருதிகளின்படி ஒழுகுவாராயின் மரணத்தை வெல்வார்.
यावत्संजायते किंचित्सत्त्वं स्थावरजङ्गमम् ।
क्षेत्रक्षेत्रज्ञसंयोगात्तद्विद्धि भरतर्षभ ॥१३- २६॥
யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தா²வரஜங்க³மம் | क्षेत्रक्षेत्रज्ञसंयोगात्तद्विद्धि भरतर्षभ ॥१३- २६॥
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோகா³த்தத்³வித்³தி⁴ ப⁴ரதர்ஷப⁴ || 13- 26||
ப⁴ரதர்ஷப⁴: = பரதக்காளையே
யாவத் கிஞ்சித் ஸ்தா²வர ஜங்க³மம் = எத்தனை எத்தனை ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும்
ஸத்த்வம் ஸஞ்ஜாயதே = பிராணிவர்க்கம் உண்டாகின்றதோ
தத் க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ ஸம்யோகா³ந் = அது க்ஷேத்திரமும் க்ஷேத்திரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்தது
வித்³தி⁴ = என்று அறி
பரதக்காளையே, ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும் ஓருயிர் பிறக்குமாயின் அது க்ஷேத்திரமும் க்ஷேத்திரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்ததென்றறி.
समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरम् ।
विनश्यत्स्वविनश्यन्तं यः पश्यति स पश्यति ॥१३- २७॥
ஸமம் ஸர்வேஷு பூ⁴தேஷு திஷ்ட²ந்தம் பரமேஸ்²வரம் | विनश्यत्स्वविनश्यन्तं यः पश्यति स पश्यति ॥१३- २७॥
விநஸ்²யத்ஸ்வவிநஸ்²யந்தம் ய: பஸ்²யதி ஸ பஸ்²யதி || 13- 27||
ய: விநஸ்²யத்ஸு ஸர்வேஷு பூ⁴தேஷு = எந்த மனிதன் அழியக் கூடிய எல்லா பூதங்களிலும்
அவிநஸ்²யந்தம் ஸமம் திஷ்ட²ந்தம் = அழியாதவனாகவும் சமமாக நிற்பவனாகவும்
பரமேஸ்²வரம் = பரமேச்வரனை
பஸ்²யதி = பார்க்கிறானோ
ஸ: பஸ்²யதி = அவனே காட்சி உடையவன்
எல்லா பூதங்களிலும் சமமாக நிற்போன் பரசுராமன். அழிவனவற்றில் அவன் அழிவான். அவனைக்காண்போனே காட்சியுடையோன்.
समं पश्यन्हि सर्वत्र समवस्थितमीश्वरम् ।
न हिनस्त्यात्मनात्मानं ततो याति परां गतिम् ॥१३- २८॥
ஸமம் பஸ்²யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்தி²தமீஸ்²வரம் | न हिनस्त्यात्मनात्मानं ततो याति परां गतिम् ॥१३- २८॥
ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் க³திம் || 13- 28||
ஹி ஸர்வத்ர ஸமவஸ்தி²தம் ஈஸ்²வரம் = எங்கும் சமமாக ஈசன் நிற்பதை
ஸமம் பஸ்²யந் = சமமாகவே பார்த்துக் கொண்டு இருப்பவன்
ஆத்மாநம் ஆத்மநா ந ஹிநஸ்தி = தன்னைத்தான் துன்பப்படுத்தி கொள்ளமாட்டான்
தத: பராம் க³திம் யாதி = அதனால் பரகதி அடைகிறான்
எங்கும் சமமாக ஈசன் நிற்பது காண்பான், தன்னைத்தான் துன்பப்படுத்தி கொள்ளமாட்டான். அதனால் பரகதி அடைகிறான்.
प्रकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वशः ।
यः पश्यति तथात्मानमकर्तारं स पश्यति ॥१३- २९॥
ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஸ²: | यः पश्यति तथात्मानमकर्तारं स पश्यति ॥१३- २९॥
ய: பஸ்²யதி ததா²த்மாநமகர்தாரம் ஸ பஸ்²யதி || 13- 29||
ச ய: = மேலும் எவன்
ஸர்வஸ²: கர்மாணி = எங்கும் தொழில்கள்
ப்ரக்ருத்யா ஏவ க்ரியமாணாநி = இயற்கையாலேயே செய்யப்படுகின்றன
ததா² ஆத்மாநம் அகர்தாரம் பஸ்²யதி = ஆதலால் தான் கர்த்தா இல்லையென்று காண்பானே
ஸ: பஸ்²யதி =காட்சியுடையான்
எங்கும் தொழில்கள் இயற்கையாலேயே செய்யப்படுகின்றன. ஆதலால்தான் கர்த்தா இல்லையென்று காண்பானே காட்சியுடையான்
यदा भूतपृथग्भावमेकस्थमनुपश्यति ।
तत एव च विस्तारं ब्रह्म संपद्यते तदा ॥१३- ३०॥
யதா³ பூ⁴தப்ருத²க்³பா⁴வமேகஸ்த²மநுபஸ்²யதி | तत एव च विस्तारं ब्रह्म संपद्यते तदा ॥१३- ३०॥
தத ஏவ ச விஸ்தாரம் ப்³ரஹ்ம ஸம்பத்³யதே ததா³ || 13- 30||
யதா³ பூ⁴த ப்ருத²க் பா⁴வம் = எப்போது பலவகைப்பட்ட பூதங்களின் தன்மை
ஏகஸ்த²ம் = ஒரே ஆதாரமுடையன
தத: ஏவ விஸ்தாரம் ச = அந்த ஆதாரத்தில் இருந்து (பரமாத்மாவிடம் இருந்து) விரிவடைந்தனவாகவும்
அநுபஸ்²யதி = காண்கிறானோ
ததா³ ப்³ரஹ்ம ஸம்பத்³யதே = அப்போது பிரம்மத்தை அடைகிறான்
பலவகைப்பட்ட பூதங்கள் ஒரே ஆதாரமுடையன என்பதை அறிவானாயின், அப்போது, அதனின்றும் விஸ்தாரமான பிரம்மத்தை அடைகிறான்.
अनादित्वान्निर्गुणत्वात्परमात्मायमव्ययः ।
शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते ॥१३- ३१॥
அநாதி³த்வாந்நிர்கு³ணத்வாத்பரமாத்மாயமவ்யய: | शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते ॥१३- ३१॥
ஸ²ரீரஸ்தோ²ऽபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே || 13- 31||
கௌந்தேய = குந்தியின் மகனே
அநாதி³த்வாத் = ஆதியின்மையால்
நிர்கு³ணத்வாத் = குணமின்மையால்
அயம் பரமாத்மா அவ்யய: = இந்தப் பரமாத்மா கேடற்றான்
ஸ²ரீரஸ்த²: அபி = இவன் உடம்பிலிருந்தாலும்
ந கரோதி = செயலற்றான்;
ந லிப்யதே = பற்றற்றான்
ஆதியின்மையால், குணமின்மையால், இந்தப் பரமாத்மா கேடற்றான். இவன் உடம்பிலிருந்தாலும் செயலற்றான்; பற்றற்றான்.
यथा सर्वगतं सौक्ष्म्यादाकाशं नोपलिप्यते ।
सर्वत्रावस्थितो देहे तथात्मा नोपलिप्यते ॥१३- ३२॥
யதா² ஸர்வக³தம் ஸௌக்ஷ்ம்யாதா³காஸ²ம் நோபலிப்யதே | सर्वत्रावस्थितो देहे तथात्मा नोपलिप्यते ॥१३- ३२॥
ஸர்வத்ராவஸ்தி²தோ தே³ஹே ததா²த்மா நோபலிப்யதே || 13- 32||
யதா² ஸர்வக³தம் ஆகாஸ²ம் = எங்குமிருந்தாலும் ஆகாசம்
ஸௌக்ஷ்ம்யாத் ந உபலிப்யதே = தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல்
ததா² தே³ஹே = அவ்வாறே உடம்பில்
ஆத்மா ஸர்வத்ர அவஸ்தி²த: = ஆத்மா எங்கணுமிருந்தாலும்
ந உபலிப்யதே = பற்றுறுவதிலன்
எங்குமிருந்தாலும் ஆகாசம் தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல், உடம்பில் ஆத்மா எங்கணுமிருந்தாலும் பற்றுறுவதிலன்.
यथा प्रकाशयत्येकः कृत्स्नं लोकमिमं रविः ।
क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत ॥१३- ३३॥
யதா² ப்ரகாஸ²யத்யேக: க்ருத்ஸ்நம் லோகமிமம் ரவி: | क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत ॥१३- ३३॥
க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா² க்ருத்ஸ்நம் ப்ரகாஸ²யதி பா⁴ரத || 13- 33||
பா⁴ரத = பாரதா
யதா² ஏக: ரவி = எப்படி சூரியன் ஒருவனாய்
இமம் க்ருத்ஸ்நம் லோகம் = இவ்வுலக முழுவதையும்
ப்ரகாஸ²யதி = ஒளியுறச்செய்கிறானோ
ததா² க்ஷேத்ரீ = அதுபோல் க்ஷேத்திரத்தை யுடையோன்
க்ருத்ஸ்நம் க்ஷேத்ரம் ப்ரகாஸ²யதி = க்ஷேத்திரமுழுதையும் ஒளியுறச் செய்கிறான்
சூரியன் ஒருவனாய், இவ்வுலக முழுவதையும் எங்ஙனம் ஒளியுறச்செய்கிறானோ, அதுபோல் க்ஷேத்திரத்தை யுடையோன், க்ஷேத்திரமுழுதையும் ஒளியுறச் செய்கிறான்.
क्षेत्रक्षेत्रज्ञयोरेवमन्तरं ज्ञानचक्षुषा ।
भूतप्रकृतिमोक्षं च ये विदुर्यान्ति ते परम् ॥१३- ३४॥
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷுஷா | भूतप्रकृतिमोक्षं च ये विदुर्यान्ति ते परम् ॥१३- ३४॥
பூ⁴தப்ரக்ருதிமோக்ஷம் ச யே விது³ர்யாந்தி தே பரம் || 13- 34||
ஏவம் க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோ: = இவ்வாறு க்ஷேத்திரத்துக்கும் க்ஷேத்திரக்ஞனுக்குமுள்ள
அந்தரம் = வேற்றுமையையும்
பூ⁴தப்ரக்ருதிமோக்ஷம் ச = ப்ரக்ருதி, பிரக்ருதியினுடைய செயல்கள் இவற்றிலிருந்து விடுபடுவதையும்
யே ஜ்ஞாநசக்ஷுஷா விது³ = எவர்கள் ஞானக் கண்ணால்
தே பரம் யாந்தி = அவர்கள் பரம்பொருளை அடைகின்றனர்
ஞானக் கண்ணால் இவ்வாறு க்ஷேத்திரத்துக்கும் க்ஷேத்திரக்ஞனுக்குமுள்ள வேற்றுமையை அறிவோர் பூதப் பிரக்ருதியினின்றும் விடுதலை பெற்று பரம்பொருளை அடைகின்றனர்.
ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रिकृष्णार्जुन सम्वादे क्षेत्रक्षेत्रज्ञविभागयोगो नाम त्रयोदशोऽध्याय: || 13 ||
श्रिकृष्णार्जुन सम्वादे क्षेत्रक्षेत्रज्ञविभागयोगो नाम त्रयोदशोऽध्याय: || 13 ||
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்’ எனப் பெயர் படைத்த
பதிமூன்றாம் அத்தியாயம் நிறைவுற்றது.
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்’ எனப் பெயர் படைத்த
பதிமூன்றாம் அத்தியாயம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment